பஞ்சலிங்கேஸ்வரா (எ) நாகேஷ்வரா

 பஞ்சலிங்கேஸ்வரா (எ) நாகேஷ்வரா (வழிபட்டநாள்-14.9.2024).

 அமைவிடம்.

கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள பொம்மனஹல்லிக்கு அருகில், 4 கி.மீ. தொலைவில் பேகூர் என்ற ஒரு சிறிய ஊரில் அமைந்துள்ளது. சில்க்போடு, மற்றும் எலக்ரானிக்சிட்டியில் இருந்து, பேகூருக்கு பேருந்துக்களும் உள்ளன.

வரலாறு.








1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, நான்கு கோபுரங்களை கொண்ட, இக் கோவில், கங்கர்கள் என்ற அரசவம்சத்தினரால் கட்டப்பட்டது. இந்த கங்கர்கள் சைவம் மற்றும் சமணம் இரண்டையும் ஆதரித்து வந்தனர். இதன் காரணமாக அழிவுற்ற சமண படுக்கைகளும் இங்கு இருக்கின்றனவாம். முதலாம் ராஜேந்திர சோழனால் கங்கர்கள் தோற்கடிக்கப்பபட்டனர். 









இந்த கோவிலில் 1. நாகேஷ்வரா, 2. காளிகடமேஷ்வரா, 3.சோளேஷ்வரா. 4. நகரேஷ்வரா. 5. காரணேஷ்வரா என்று ஐந்து சிவ சன்னதிகளை கொண்டுள்ளது. இதில் இரண்டு சன்னதிகள், கங்கர்கள் காலத்திலும், மற்ற மூன்று சன்னதிகள் சோழர்கள் காலத்திலும் கட்டப்பட்டுள்ளது. தட்சிணாமூரத்தி, பார்வதி அம்மன் சன்னதி; என்ற பிற சன்னதிகளும் உள்ளன.







புராண வரலாறு.

இமயமலைக்கு சென்று இலங்கை திரும்பிய ராவணன், கொண்டுவந்த ஆத்மலிங்கத்தில் இதுவும் ஒன்று என்ற கல்வெட்டும் உள்ளதாம். கோகர்னா புராணாகதையே இங்கும் சொல்லப்படுகிறது என்று இங்கு இருந்த ஒரு தமிழ் அரச்சகர் தெரிவித்தார். (கோகர்னா புராணம் என்னுடைய கோகர்னா பக்கதில் உள்ளது).

நான் அறிந்த வரலாறு.

ஜார்கன்ட் மாநிலம் (Deoghar) பைத்யநாதீஷ்வரர் (Baidyanatheswar) என்ற புகழ் பெற்றசிவன் கோவிலும் இதே வரலாறு கொண்டுள்ளது. இவ்வாறு ராவணனால் கொண்டு செல்லப்பட்ட ஆத்மலிங்க சிவன் கோவில்கள் பல உள்ளன. நான் இக்கோவில்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். இக்கோவில் (பேகூர்) 18 ஆவது கோவில் என்ற குறிப்புள்ளதாக (கல்வெட்டில்) அர்ச்சகர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...