இலங்கை அம்மன் கோவில்கள் (இலங்கை பயணநாள் 11.9.23 முதல்16.9.23வரை)
1. நைனிதீவு- நாகபூஷணியம்மன். (தரிசனநாள்-12.9.23).
இலங்கை யாழ்பாணம் மாவட்டம், நயினிதீவில் அமைந்துள்ளது இந்த கோவில். 18 மகாசக்திபீடங்களில் இடுப்பு பகுதி வீழ்ந்த இடமாகவும், 51 பீடங்களில் கால் சிலம்பு விழுந்த இடமாக கூறப்படுகிறது. போர்ச்சுகீசியர்களால் பாதிப்படைந்த கோவிலில் இதுவும் ஒன்றாகும்.
நாக வழிபாட்டின் விளைவாகவே இந்த தீவு மிகவும் போற்றப்படுகிறது. தமிழர்கள் மற்றும் இலங்கை தழிழர்கள் (இந்துமதத்தவர்கள்) நாகத்தை வணங்கினர் என்பதற்கு இந்த நாக தீவு சான்றாக அமைந்துள்ளது. நாகத்தின் முக்கிய வழிபாட்டு தலமாகவே இந்த இடம் விளங்கியது. ஈழ கோவில்கள் அனைத்தும் புராண கதைகளுடன் தொடர்பு கொண்டவையாகவேயுள்ளது.
வரலாற்று தொடர்பு.
இந்திரன் சாபம் நீங்கி அம்மனுக்கு ஆலையம் கட்டினான். மகாபாரதத்தில் அர்சுணன் நாகத்தை கொண்ற பாவம் நீங்க அம்மனை வணங்கினான். மணிமேகலையில் நாக அரசி வீலிவளை மீது காதல் கொண்டு இந்திர விழாவை நடத்த சோழமன்னன் கிள்ளி மறந்தான் என்ற கதையும் உள்ளது.
புகைபடங்கள் மற்றும் காணொளிகள்.
2. பத்ரகாளியம்மன் கோவில். (ஆலயதரிசனம்-13.9.23)
திரிகோணமலையில் இந்த ஆலையம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமைவாய்ந்த கோவில் என்றும், 11ஆம் நூற்றாண்டுக்கு முந்தய கோவில் என்ற கல்வெட்டும் உள்ளதாம். கோவில் பராமரிப்பு மிகவும்நன்றாக உள்ளது. உள்மண்பத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் பிரமிப்பூட்டுகின்றன. புகைபடங்களை பார்தால் அதிசயித்துபோவீர்கள். நாங்கள் ஒரு மணி நேரம் இருந்தோம், அர்சகர் எந்த வித கவனசிதைவின்றி பூஜை செய்து கொண்டிருந்தார்.
புகைப்படங்கள், மற்றும் காணொளிகள்.
3. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில். (13.9.23-தரிசனநாள்)
கண்டியில் இருந்து 25.கி.மீ. தொலைவில் மாத்தளை என்ற ஊரில் நகரப்பகுதிக்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ளது. 108 அடி ராஜகோபுரமும், 5 தேர்களும் இந்த கோவிலின் சிறப்பாகும். 1934 ஆம் ஆண்டு ரததேர் உற்சவம் தொடங்கப்பட்டது. 1955 –ல் ராஜகோபுரம், மகா மண்டபம், வசந்த மண்டபம், மற்றும், முருகன், விஷ்ணு, சிவன், நாயன்மார்கள், மீனாட்சி என்று அனைத்து சன்னதிகளும் ஊர்மக்கள் ஒன்று கூடி திருப்பணிசெய்தனர். 1977-ல் சித்திரை தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 இனக்கலவரத்தில், தேரும், மண்டபமும் எரியுட்டப்பட்டது. 1992 மீண்டும் சித்திரை தேர் திருப்பணி தொடங்கியது. தாயே சரணம்.
No comments:
Post a Comment