இலங்கை விநாயகர் கோவில்கள். இலங்கை (பயணநாள்- 11.9.23 முதல்16.9.23வரை)
செல்வவிநாயகர் ஆலயம்.
கண்டி முருகன் ஆலயத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த ஆலயம். இது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இவர் கட்டுக்கலை பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார். பங்குனிஉத்தரத்தின் முடிவில் 10 நாட்களுக்கு திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது. இலங்கை மத்திய மாகாண இந்து சங்கம் இந்தவிழாவிற்கு உதவுகிறது.
கொழும்பு இரட்டை விநாயகர்.
எங்கள் பயணத்தின் நிறைவாக கொழும்பு நகர சுற்று பயணத்தின் போது இந்த மாணிக்கவிநாயகர், சர்வார்த்த சித்திவிநாயகர் என்ற இரண்டு கோவிலுக்கும் சென்றோம். இந்த இரண்டுகோவில்களும் பத்தடி தொலைவில் அருகருகே அமைந்துள்ள, மிகபிரம்மாண்டமான கோவிலாகும்.
இலங்கை அம்மன் கோவில்கள் (இலங்கை பயணநாள் 11.9.23 முதல்16.9.23வரை)
1. நைனிதீவு- நாகபூஷணியம்மன். (தரிசனநாள்-12.9.23).
இலங்கை யாழ்பாணம் மாவட்டம், நயினிதீவில் அமைந்துள்ளது இந்த கோவில். 18 மகாசக்திபீடங்களில் இடுப்பு பகுதி வீழ்ந்த இடமாகவும், 51 பீடங்களில் கால் சிலம்பு விழுந்த இடமாக கூறப்படுகிறது. போர்ச்சுகீசியர்களால் பாதிப்படைந்த கோவிலில் இதுவும் ஒன்றாகும்.
நாக வழிபாட்டின் விளைவாகவே இந்த தீவு மிகவும் போற்றப்படுகிறது. தமிழர்கள் மற்றும் இலங்கை தழிழர்கள் (இந்துமதத்தவர்கள்) நாகத்தை வணங்கினர் என்பதற்கு இந்த நாக தீவு சான்றாக அமைந்துள்ளது. நாகத்தின் முக்கிய வழிபாட்டு தலமாகவே இந்த இடம் விளங்கியது. ஈழ கோவில்கள் அனைத்தும் புராண கதைகளுடன் தொடர்பு கொண்டவையாகவேயுள்ளது.
வரலாற்று தொடர்பு.
இந்திரன் சாபம் நீங்கி அம்மனுக்கு ஆலையம் கட்டினான். மகாபாரதத்தில் அர்சுணன் நாகத்தை கொண்ற பாவம் நீங்க அம்மனை வணங்கினான். மணிமேகலையில் நாக அரசி வீலிவளை மீது காதல் கொண்டு இந்திர விழாவை நடத்த சோழமன்னன் கிள்ளி மறந்தான் என்ற கதையும் உள்ளது.
புகைபடங்கள் மற்றும் காணொளிகள்.
2. பத்ரகாளியம்மன் கோவில். (ஆலயதரிசனம்-13.9.23)
திரிகோணமலையில் இந்த ஆலையம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமைவாய்ந்த கோவில் என்றும், 11ஆம் நூற்றாண்டுக்கு முந்தய கோவில் என்ற கல்வெட்டும் உள்ளதாம். கோவில் பராமரிப்பு மிகவும்நன்றாக உள்ளது. உள்மண்பத்தில் அமைந்துள்ள சிற்பங்கள் பிரமிப்பூட்டுகின்றன. புகைபடங்களை பார்தால் அதிசயித்துபோவீர்கள். நாங்கள் ஒரு மணி நேரம் இருந்தோம், அர்சகர் எந்த வித கவனசிதைவின்றி பூஜை செய்து கொண்டிருந்தார்.
புகைப்படங்கள், மற்றும் காணொளிகள்.
3. ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில். (13.9.23-தரிசனநாள்)
கண்டியில் இருந்து 25.கி.மீ. தொலைவில் மாத்தளை என்ற ஊரில் நகரப்பகுதிக்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ளது. 108 அடி ராஜகோபுரமும், 5 தேர்களும் இந்த கோவிலின் சிறப்பாகும். 1934 ஆம் ஆண்டு ரததேர் உற்சவம் தொடங்கப்பட்டது. 1955 –ல் ராஜகோபுரம், மகா மண்டபம், வசந்த மண்டபம், மற்றும், முருகன், விஷ்ணு, சிவன், நாயன்மார்கள், மீனாட்சி என்று அனைத்து சன்னதிகளும் ஊர்மக்கள் ஒன்று கூடி திருப்பணிசெய்தனர். 1977-ல் சித்திரை தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 இனக்கலவரத்தில், தேரும், மண்டபமும் எரியுட்டப்பட்டது. 1992 மீண்டும் சித்திரை தேர் திருப்பணி தொடங்கியது. தாயே சரணம்.
இலங்கை சிவஸ்தலங்கள். (இலங்கை பயணம் 11.9.23 முதல் 16.09.23 வரை)
பஞ்சஈஸ்வர தலங்கள் மிகவும் புகழ்பெற்றதாகவும் சிறப்புடயதாகவும் விளங்குகின்றன. நாங்கள் தரிசித்த மற்ற சிவஸ்தலங்களும் இதில் வெளியிடுகிறேன். பஞ்சஈஸ்வரதலங்கள்.
1. முன்னேஸ்வரம்.
2. கேதீச்சரம்.
3. நகுலேஸ்வரம்.
4. கோணேஸ்வரம்.
5. தண்டீஸ்வரம் (அ) தொண்டேஸ்வரம்.
இந்த பஞ்சஈஸ்வர தலங்கள் ராவணனால் எழுப்பபட்டதாக சொல்லப்படுகிறது.
கேதீஸ்வரமும், கோணேஸ்வரமும் தேவாரபாடல் பெற்ற தலங்களாக விளங்குகின்றன.
தண்டீஸ்வரம் தற்பொழுது புத்த மடாலயமாக உள்ளது. ராவணனால் இந்த ஈஸ்வர தலம் அமைக்கப்படமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சீதையை கவர்ந்து வந்ததால் ஏற்பட்ட, சிந்தை மாற்றமே இந்த ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்ய முடியாமல் போனது என்ற கருத்தும் உள்ளது.
முன்னேஸ்வரம். (தரிசனநாள் 11.9.23)
இலங்கை நாட்டில், புத்தளம் மாவட்டத்தில், சிலாபம் என்ற ஊரில் அமைந்துள்ளது. வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். விநாயகருக்கு தனிக்கோவில் உள்ளது. இரண்டு வாயிலுடன் மிக சிறப்பாக அமைந்துள்ள கோவிலாகும். பிச்சாடணமுர்த்தி 5.5 அடி உயரத்தில் மிக பிரும்மாண்டமாக எழுந்தருளியுள்ளார். நல்ல வடிவுடன் கூடிய தேர் உள்ளது. கொடி மரம், நந்திகேசருடன், சற்று பெரிய லிங்கமாக மகேஸ்வரன் அருள்தருகிறார்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கீழ் பகர்ந்துள்ளேன்.
2.மானாவரி சிவன் கோவில். (தரிசனநாள்-11.9.23)
ராமர் இலங்கை வந்த போது அவருக்கு ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய மணலால் பிடித்து வழிபட்ட முதல் லிங்கமாகும். இதன்பிறகே ராமேஸ்வரதில் ராமர் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே மானாவரி சிவன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் அர்சகர் எங்களுக்கு கூறிய தலவரலாறு காணொளியை இங்கு வெளியிடுகிறேன்.
இக்கோவில் புகைப்படங்கள்.
3.கேதீச்சரம். (தரிசனநாள்-11.9.23)
மன்னார் மாவட்டம், மாதோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ள தலம். கேது வழிபட்ட தலம். சூரபத்மனின் மனைவி பிள்ளைப்பேறு வேண்டி பாலாவி தீர்தத்தில் நீராடி புத்திர பாக்கியம் பெற்றாள்;. ஞானசம்மந்தர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற தலம். சோழன் மற்றும் பாண்டிய மன்னர்கள் கோவில் திருப்பணி செய்துள்ளனர். வன்னி, யாழ்பாண அரசர்கள் நித்யபூஜை தடையறாது செய்துள்ளனர். நாவுக்கரசரின் திருதாண்டகத்திலும், சேக்கிழாரின் பெரிய புராணத்திலும், இக் கோவில் பற்றிய குறிப்புள்ளது.
புகைப்படங்கள்.
நகுலேஸ்வரம். (தரிசனநாள்-12.9.23)
மிகவும் பழமைவாய்நத கோவிலாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்த விஜயன் என்னும் அரசனால் இக் கோவில் புதுபிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கீரிமலை கேணியானது கண்டகி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த தீர்தத்தில் ராமர், ராவணன், அர்ச்சுனன் ஆகியோர் நீராடி நகுலேஸ்வரரை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர். யமதக்னிமுனிவர் இத்தல ஈசனை வணங்கி சாபவிமோசனம் பெற்றார். சோழமகராஜனின் மகள் மாருதபுரவீகவல்லி, சாபத்தினால் குதிரை முகம் அடைந்தார். இந்த இளவரசி இலங்கைக்கு வந்து இந்த தீர்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றாள். சிதிலம் அடைந்த இந்த கோவில் புணரமைப்புக்கு ஆறுமுக நாவலரின் பங்கு பெரும்பான்மையானது என்று வரலாறு கூறுகிறது.
புகைப்படம் மற்றும் காணொளி.
திருவாசகஅரண்மனை.தரிசனநாள்- (12.9.23)
உருவானவரலாறு.
திரு.ஆறு.திருமுருகன் என்பவர் திருவண்ணாமலைக்கு “திருமந்திரமும் திருவாசகமும்” என்ற தலைப்பில் சொற்பழிவு நிகழ்த்த சென்ற சமயம், ஒரு சித்தர் அவரிடம் திருவாசகத்தை யாழ்பாணத்தில், இயற்கை அழிவில் இருந்து காப்பாயாக என்று பணித்தார். இப்படி தோன்றியதே திருவாசக அரண்மனை.
நிதி உதவி அறிவோம்.
சிட்னி என்ற நகரில் வாழும் மருத்துவர் திரு. மனமோகன்-சிவகௌரி தம்பதியினர் கட்டுமானத்திற்கான மனையை உபயம் செய்தனர். பல பக்தர்கள், மற்றும் பணம் படைத்தவர்களின் நிதி உதவியும், கிடைத்தது. 400 லட்சம் என்று இதன் மதிப்பு அறியப்படுகிறது.
தோற்றம்.
ஜுன் மாதம் 24 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, 25 ஆம் தேதி குடமுழுக்கு செய்யப்பட்டது.
அரண்மனை அமைப்பு.
நான்கரை அடி உரத்தில் மூலவர் தட்சிணாமுர்த்தி. அவருக்கு முன்னால் நத்தியம் பெருமாள். அதற்கு முன்பு சிவலிங்கத்துடன் மாணிக்கவாசகர் என்ற அமைப்பிலும், திருவாசகம் 656 பாடல்களும் கருங்கல்லில் மனிதன் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி மூலவரை சுற்றி 108 சிவலிங்கமும், 108 மணியும் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர யாத்திரிகர்களுக்கு அறை, அர்சகர் அறை, சமயலறை, திருவாசக ஆராய்க்கி நிலையம் மற்றும் நூல்நிலையத்தை உள்ளடக்கியுள்ளது.
கலைஞர்கள் அறிவோம்.
ஆக்கம் -ஊரெழு-சண்முகநாதன். தென்இந்திய சிற்பகலைஞர்- புருஷோத்தமன். எழுத்துகளை கல்லில் வடித்தவர் திரு. வினோத் அவர்கள்
எங்கள் அனுபவம்
சிவலிங்கத்திற்கு எங்கள் கையால் அபிஷேகம் செய்யத பாக்கியம் பெற்றோம். (12.9.23 செவ்வாய்கிழமை) பிரதோஷவழிபாடு செய்தோம். சிவாயநமஓம்.
கூடுதல் தகவல்.
உலகில் --- பைபிள் (Bible) வெள்ளை கற்களில் பதித்துள்ளனர். திருக்குரான்,(Quran) மகாபாரதம் (Mahabharata)---- கற்களில் எழுத்துபதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்பாணத்தில் திருவாசகம்.—கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
திரிகோணமலை. தரிசனநாள் -13.9.23)
இலங்கையில் திரிகோணமலை மாவட்ட தலைநகர் திரிகோணமலையில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது.மாணிக்கராஜா என்ற இலங்கை மன்னன் 1300 ஆம் ஆண்டு இந்த கோவிலை கட்டினான் என்று சொல்லப்படுகிறது. 1624 ஆம் ஆண்டு போச்சுகீசியர்களால் கோவில் அழிக்கப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் 1952 மீண்டும் கட்டப்பட்டது. 7ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் வாழ்ந்த ஞானசம்மந்தரால்; பாடப்பெற்ற தலமாகும். அருணகிரிநாதராலும் இத்தல முருகன் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். மாதுமையாள் உடனுறை கோணேஸ்வரர் என்பது இத்தல ஈசன் நாமம். பங்குனிஉத்திரம் அன்று கொடியேற்றத்துடன், 18நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. சிவராத்திரியும் மிகசிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.
புகைப்படம் மற்றும் காணொளி.
தண்டீஸ்வரம். (தரிசனநாள்-15.9.23)
மாத்தறை மாவட்டம் தெவிநுவர என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த தலம் தொண்டேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. போர்சசுகீசியரால் அழிக்கப்பட்டது இந்த கோவில். அகழ்வாராச்சியின் போது ஒருபெரிய சிவலிங்கம் கிடைத்தது என்றும் பின் இந்த தகவல் வெளிவராமல் தடுக்கப்பட்டது என்று ஆய்வாளர் முருக குணசிங்கம் கூறுகிறார். சிங்களபௌத்தரால் ஒரு கிருஷ்ணர் பிரதிஷ்டை செய்யப்பட்டு “தெவிநுவரகோவில் என்று அழைக்கப்படுகிறது. பெரிய புத்தர் சிலையும், சில சன்னதிகளும் உள்ளன.
புகைப்படம் மற்றும், காணொளிகள்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் - கோவில் (தரிசனநாள்-16.9.23)
இலங்கையில் வெள்ளவெத்தை என்ற இடத்தில் உள்ளது.இந்த கோவில் கம்பவாரிதி மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.இலங்கை ஜெயராஜ் என்பரால் வெள்ளவெத்தை என்ற இடத்தில், அவர் இல்லத்தின் அருகில் கட்டப்பட்ட கோவிலாகும். இறைவனை அடையக்காட்டும் வழிமுறையே இந்த நான்கும். இதை அடிப்படையாக கொண்டு மூன்று நிலைகளில் கோவில் கட்டியுள்ளார்;. இந்த ஆலயம் அவர் வீட்டின் எதிரில் உள்ளது. வீட்டை தொடர்ந்து ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் திருவள்ளுவர், கம்பன், அகத்தியர், நக்கீரர் ஆகியோரின் உருவங்கள் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்.
பொன்னம்பலவாணேஸ்வரர். (தரிசனநாள்-16.9.23)
கொழும்பு நகரில் உள்ள புகழ்வாய்நத கோவில். 1856 ஆம் ஆண்டு பொன்னம்பல முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. 1907 ஆம் ஆண்டு அவரின் மகன் பொன். ராமநாதன் என்பவர் கற்கோவிலாக கட்ட துவங்கினார். 1912 ஆம் ஆண்டு முடித்து குடமுழுக்கு செய்து வித்தார். கற்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. 25 அடி நீளம், 5அடி அகலம், 1 அடி கனம் கொண்ட கருங்கற்கல் கொண்டுவரப்பட்டன. விஜயநகர கட்டிட பாணியை பின்பற்றி கட்டப்பட்டன. ராஜகோபுரம் கட்டிமுடிக்கும் முன்பே இவர் இயற்கையெய்திய காரணத்தால் பல ஆண்டுகள் கோவில் கோபுரம் மொட்டை கோபுரமாகவே இருந்தன. 1965 ஆம் ஆண்டு இந்த சந்ததியினர் கோபுரம் கட்டினர். ஆனால் கோபுரம் கருங்கற்கள் இல்லை. கருங்கற்கள் போன்றே தோற்றம் அளிக்க இன்று வரை வண்ணம் தீட்டப்படாமலே, உள்ளது. இந்த ராமநாத முதலியார் வழக்குரைஞர், அரசியல், கௌன்சில் பணி, என்று பன்முக வித்தபராக பணியாற்றியவர். கோவிலுக்குள் புகைபடம் எடுக்க அனுமதி இல்லை.நம் அரசர்கள் கட்டிய கோவிலுக்கும், விஜயநகரபேரரசு கோவிலுக்கும் இணையாக இருந்தது இந்த ஆலையம். சிவாயநமக.