திருக்கச்சிநம்பி, வரதராஜபெருமாள் கோவில் -பூந்தமல்லி. (தரிசனநாள்-18.6.23)
திருக்கச்சிநம்பி.
இவர் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்( சிறந்த பெருமாள் பக்தர்). பிறந்த ஊர் இந்த பூவிருந்தவல்லி. காலப்போக்கில் பூந்தமல்லி என்றானது. இறைவனுக்கு விசிறி வீசியும் (ஆலவட்டம் வீசி)பூக்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டுவதையே சிறந்த இறைத்தொண்டாக செய்து வந்தார். இறைவனிடம் பேசும் வல்லமை படைத்தவர். ராமானுஜரின் குருநாதரும் ஆவார்.
அமைவிடம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாம்பரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த ஆலையம்.
தலவரலாறு.
காஞ்சி வரதராஜபெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்ட திருக்கச்சி நம்பி அவர்கள், பூக்களை பறித்து மாலையாக தொடுத்து தினமும் பூந்தமல்லியில் இருந்து காஞ்சிக்கு நடந்துசென்று வரதராஜபெருமாளுக்கு சூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல் சுகமின்மை காரணமாக ஒருநாள் நடக்கமுடியாமல் போய்விடுகிறது. வரதராஜனையே நினைத்திருந்ததால், மறுநாள் காலை சூரியோதையத்தின் போது, பூந்தமல்லிக்கே வந்து திருக்கச்சிநம்பிக்கு காட்சி கொடுத்து மாலையை ஏற்றுக்கொள்கிறார்.
திருக்கச்சிநம்பிகள் சன்னதி.
வரதராஜர் சன்னதிக்கு பட்டாச்சாரியார் சென்று சுத்தம் செய்து பூ சாற்றி விளக்கேற்றியபிறகு, திக்கச்சிநம்பிசன்னதிக்கு வந்து ஆராதனை செய்கிறார், முதல் ஆராதரன நம்பி அவர்களுக்கு அதுவரை (நாங்களும்) பக்தர்களும் திருக்கச்சிநம்பி சன்னதியில் காத்திருந்தோம்.
ரெங்கநாதர் சன்னதி.
ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் திருச்சிநம்பிக்கு காட்சி கொடுத்து இங்கேயே அருள்பாலிக்கிறார். இரண்டாவதாக, ஆராதனை இவருக்கு.
வரதராஜபெருமாள்.
மூன்றாவதாக இவருக்கு ஆராதனை, நின்ற கோலத்தில் பின் தலையில் சூரியஒளிவட்டத்துடன் அருள்பாலிக்கிறார், காஞ்சி வரதராஜர் பூந்தமல்லியில்.
ஸ்ரீநிவாசர்.
திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாசர் சன்னதி வெளிப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அடுத்த ஆராதணை இவருக்கு. ஸ்ரீநிவாசரும் இந்த அடியாருக்காக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளார்.
பூவிருந்தவல்லி தாயார்.
இத்தலபூவில் அமர்ந்திருப்பதாள் பூவிருந்தவல்லி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ஐந்தாவதாக இவருக்கு ஆராதனை.
ஆளவந்தாருக்கு தனி சன்னதியுள்ளது.
நாங்கள், காலை ஏழு மணிக்கே சென்றதாள், இந்த தரிசனம் கிடைத்தது, சொற்பமான பக்தர்கள் இருந்தனர்.