திருக்கச்சூர். (தரிசனநாள்-6.2.2023). தேவாரபாடல் பெற்ற தலம்.
அமைவிடம்.
காஞ்சிபுர மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் உள்ளது. சென்னையில் இருந்து சிங்கபெருமாள் கோவிலுக்கு முன்பு இடதுபறம், திருக்கச்சூர் அமைந்துள்ளது.
சிறப்பு.
1.சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும். திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம், இறைவனை வழிபட்டுவிட்டு, சுந்தரர் திருகச்சூர் வந்தடைகிறார். பசியுடன் களைப்படைந்து சுந்தரர் காணப்பட்டார், என்றும், சிவபெருமான் வீடுகளில் உணவை இரந்து, சுந்தருக்கு அளித்தார் என்பதும், இத்தல வரலாறு.
2.ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் தரிசனம் செய்து கச்சபேஸ்வரரை பாடியுள்ளார்.
3.திருமால் கச்சப்ப(ஆமை) வடிவில் வந்து அமுதம் கிடைக்க வழிபட்ட தலம்.
4. கஜபிருஷ்ட விமானம் அமைப்பை (ஆனை(யானை)யின் முதுகு போல்) கொண்டதால் ஆலக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.
5. மூலிகை நிறைந்த மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், ஈசன் மருந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தற்சமயம் ஆலையம் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment