ஒன்டிமட்டிகோதண்டராமஸ்வாமி கோவில். (தரிசனநாள்-3.12.2023)
c
ஆந்தர மாநிலம் கடப்பா மாவட்டததில், 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரபேரரசால் கட்டப்பட்ட கோவிலாகும். 3 வாயில்களையும், 5நிலை ராஜ கோபுரத்தையும் கொண்டது இந்த ராமர் கோவில். அன்னமாச்சாரியார், இந்த ராமரை வணங்கி கீர்தனைகள் (பாடல்கள்) எழுதியுள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறது.
ஆந்ரா மாநிலத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா என்ற மாநிலம் பிரிந்த பின்பு, ஸ்ரீராமநவமி விழா இந்த கோவிலிலும், மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பு "பத்ராஜ்சலம்" ராமர் கோவிலில் ராமநவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணயதேவராயரின் லெஷ்மிநரசிம்மர் கோவில். (தரிசனநாள்2.12.2023)
அகோபிலத்தில் நாங்கள் கிருஷ்ணதேவராயர் சத்திரத்தில் தங்கி இருந்தோம். சத்திரத்திற்கு எதிரே 500 மீ. தூரத்தில் ஒருபெரிய பழமையான லெஷ்மிநரசிம்மர் கோவில் இருந்தது. ஆந்தரபிரதேசத்தில், பல கோயில்கள் விஜயநகரபேரரசு காலதில் கட்டப்பட்டன. நல்ல நீண்ட, அகலமான சன்னதி தெருவில், 4 நிலை கோபுரத்துடன் அமைந்த கோவில். பெரிய மதில் சுவரை கொண்ட முதல் பிரகாரத்தில் பல மரங்களும், கோசாலையும், பெரியளவில் கலை நிகழ்ச்சிக்கான மேடையும் உள்ளது. உட்பிராகாரத்தில் ஸ்ரீநிவாசர் சன்னதி, ஆண்டாள் சன்னதி என்று சிறிய சன்னதிகள் உள்ளனர். மூலவர் லெஷ்மி நரசிம்மர், அதை தொடர்ந்து லெஷ்மிக்கு தனி சன்னதியுள்ளது. கோவிலுக்கு வெளியே பாஷ்ய சன்னதியுள்ளது.
டிசம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதி அகோபில தரிசனம் என்று முடிவு செய்து பயணத்தை முன் பதிவு செய்துவிட்டோம். புயல் பற்றிய செய்தியை கேட்டாலும், மனதில் புயல் பற்றிய எண்ணம் ஏற்பட்டாலும், நான் உடனே எங்கள் குலதெயவமான வெங்கடேசபெருமாளிடம் தடையில்லாத தரிசனம் கிடைக்க பிராததித்துக்கொள்வேன்.
டிசம்பர் 1 ஆம் தேதி 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கடப்பாவுக்கு ரயில், கிளம்பி கொண்டிருக்கும் சமயம், சக பயணியர் 15 நபர்கள் அவர்கள் பயணத்தை ரத்து செய்வதாக வாட்சப் பயண குழுவில் பதிவிட்டவுடன் நான் அதிர்ந்தேன்.
பரகாலயாத்திரை அலுவலகம் , எக்காரணம் கொண்டும் பயணம் நிறுத்தபட மாட்டாது, என்று உடனே பதிவிட்டனர். இறைவனுக்கு நன்றி செலுத்தி பயணத்தை தொடர்ந்தோம்.
ரேனிகுண்டாவில் பயணிகள் பலர் திருப்பதி தரிசனம் முடித்து புகைவண்டியில் ஏறிய உடன் திருப்பதியில் மழை தொடங்கிவிட்டது என்று கூறிய செய்தியை கேட்டவுடன், “ஓம் நமோநாராயனா” என்று என்னையறியமால் மனது வழிபட துவங்கியது.
கடப்பாவில் இருந்து இரண்டு மணி நேரம் பயணித்து அகோபிலம் சென்று எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து கைபேசியை திறந்தால், வந்த முதல் செய்தி, “திருப்பதியில் கனமழை பக்தரிகள் தவிப்பு” என்பதுதான். “இறைவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான்” என்ற ரஜனி பட வசன நினைவுடனும், மறுநாள் நரசிம்மர் தரிசன நினைவுடனும், தூங்கச்சென்றேன்.
ஒன்பது நரசிம்மர்களில் அனுகிரகத்தால் நல்ல தரிசனம் கிடைத்து ஒன்டிமட்டா ராமர் தரிசனத்திற்காக கிளன்பினோம். வழிஎங்கும் மழைபெய்திருந்தது. ஆனால் நாங்கள் இருந்த 3 மணிநேரமும் ஒன்டிமட்டியில் மழை இல்லை, ராமரின் அனுகிரகத்தாலும் நல்ல தரிசனம் கிடைத்து கடப்பா ரயில் நிலையம் சென்றோம்.
4ஆம் தேதி, காலை 7 மணிக்கு வரவேண்டிய ரயில் மழைகாரணமாக 8 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில்லிருந்து, 6 கி;.மீ. தொலைவில்உள்ள எங்கள் வீட்டிற்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். காலை சிற்றுண்டி கிடைக்காமல், மதியம் கிழக்கு தாம்பரத்தில் உணவருந்தி, 7 மணி நேரத்திற்குமேல் ஈரத்துடன் தண்ணீரில் அதிக நேரம் நின்று சற்று சிரமத்தற்க்கு உள்ளானாலும், எந்த வித பக்கவிளைவுகள் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பது நரசிம்மரின் அருளே. ஜெய் நரசிம்மா!!!
அகோபிலம் சென்று தரிசிக்க வேண்டும் என்று முடிவு செய்த உடன், செல்லும் வழிமுறையை தீர்மானித்தோம். “ஆந்திரமாநில யாத்திரை” என்று சென்றால் பல கோவில்களுடன் இரண்டுநாட்கள் அகோபிலம் என்று யாத்திர அட்வணை இருந்தது. காட்டுபாதையில் மலைமீது உள்ள திவ்ய தேசம் என்பதால் நாங்கள் இதை தவிர்தோம். வார இறுதி நாட்கள், யாத்திரையில் பல யாத்திரிகர்கள் வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு பேருந்தில் பயணம் என்று திட்டமிட்டிருந்தனர். அதனால் நாங்கள் இதையும் தவித்து ரயிலில்பயணிக்கும் “பரகால யாத்திரை சேவா” என்ற டிராவல் ஏஜன்சியை தேர்தெடுத்தோம்.
அமைவிடம்.
ஆந்திரமாநிலம், கடப்பா ரயில்நிலையத்தில் இருந்து, செல்ல வேண்டும். நந்தியால்- கடப்பா நெடுஞ்சாலையில், அல்லகட்டா என்ற இடத்திற்;கு அருகில் இந்த அகோபிலம் என்ற திவ்யதேசம் அமைந்துள்ளது.
பெயர்காரணம்.
அஹோபலம் - இரண்யனை மடியில் கிடத்தி, தோலைகிழித்தநேரத்தில், தேவர்கள் “என்னஅற்புதம”; என்று கோஷமிட்டனர். இதன் காரணமாக அகோபலம் என்ற பெயர் பெற்றது. (அஹோபலம் - என்னஅற்புதம்).
அகோபிலம் - (பிலம்-குகை)குகையில் இருந்து அருள்பாலிப்பதால் இப்பெயர் பெற்றது.
சிங்கவேள்குன்றம் - “திருமங்கையாழ்வார்”; பாசுரத்தில் “சிங்கவேள்குன்றம்”; என்றே இந்த ஷேத்திரத்தை குறிப்பிடுகிறார்.
ஷேத்ரமகிமை (தலப்பெருமை).
“காஷ்யாம் யக சகஷ்ராணி” என்ற ஸ்லோகத்தில் நாரதர் சொல்கிறார். இதில் காசியில் 1000 யுகம்வசித்த புண்யம், ப்ரயாகையில் 20 யுகம் வசித்த புண்யம், கயாவில் 1000 யுகம் வசித்த புண்யம் இந்த ஷேத்ரத்தில் ஒரு இரவு தங்கினாலே கிடைக்கும் என்று இந்த சுலோகம் மூலம் ஷேத்ர மகிமையை கூறுகிறார்.
அகோபிலம் நமக்கு எப்படி கிடைத்தது?
கருடன் ஸ்ரீமன்நாராயனரிடம், நான் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, அவதாரங்களில் உங்களுக்கு உதவமுடியாமல் போனது என்று வருந்தி, நரசிம்மஅவதாரதரிசனத்தை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டி, அவதார இடமான, அகோபிலத்தில், தவம் மேற்கொண்டார். கருடனுக்கு நவநரசிம்மராக, காட்சி கொடுத்தார் வைகுண்டவாசன். கருடனும் தரிசனம் பெற்று மகிழ்ந்து இந்த நவநரசிம்ம மூர்திகள் இந்த தலத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டினார். இவ்வாறு கருடாழ்வார் மூலம் கிடைத்ததே இந்த திவ்யதேசம்.
நாங்கள் தரிசனம் செய்த முறைப்படி ஒன்பது நரசிம்மர்களை அ
னுபிவிக்கலாம்.
1. அஹோபிலநரசிம்மர்(அ)உக்கரநரசிம்மர்.
அஹோபிலம் என்பதே ஒரு வனப்பகுதியாகும். மேல் அகோபிலத்தில் அமைந்துள்ள இந்த உக்ரநரசிம்மர் நடந்துசெல்லும் தொலைவிலேயே உள்ளதால் அனைவரும் மிக எளிமையாக இவரை தரிசனம் செய்யமுடியும். அதற்கு பின் உள்ள நரசிம்மர்களை தரிசிக்க, நடந்தோ அல்லது டோலியிலோ இறைவனை தரிசிக்கலாம். மலையைகுடைந்து. இதில் நரசிம்மர் வீற்றிருக்கிறார். இந்த இடத்தை அடிப்படையாக கொண்டு, சுற்றி நல்ல கலைநயத்துடன் கற்றளி கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. நரசிம்மருக்கு எதிரே பிரகலாதன் உள்ளார். நரசிம்மர் சிவனை பூஜிப்பதாக ஒரு ஐதீகம் காரணமாக, இங்கு ஒரு சிவலிங்கமும் உள்ளது. இலக்குமிதேவிக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. இங்கிருந்தே மலைஏற்றம் அல்லது டோலி பயணம் துவங்குகிறது. (2.12.2023ன்படி)4.000ரூ டோலி கட்டணம்.
2. மாலோல நரசிம்மர்.
சற்று மலை பகுதியில் நடந்து, பின் சுமார் 300 படிகள் கடந்து இந்த நரசிம்மரை வழிபட வேண்டும். 13ஆம் நூற்றாண்டில் ஒரு இளைஞன் இவர் மீது மிகுந்த பக்தி கொண்டு தவம் புரிந்து வந்தான். இறைவன் அவர் முன் தோன்றி, அந்த இளைஞனை துறவரத்தில் ஈடுபடுத்தி, வைணவ கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்ல பணித்தார்.
இவருக்கு “யதீந்த்ர மகாதேசிகன்” என்ற பெயர் சூட்டி, ஸ்ரீராமானுஜர் ஸன்னதியில இருந்த திரிதண்டத்தையும், காஷாயத்தையும், அளித்தார். அவர் தொடங்கியதே “அகோபிலமடம்”. இவரை பின்பற்றி வந்த அழகியசிங்கர்கள் (ஜீயர்கள்) தொடர்ந்து இந்த மாலோல நரசிம்மரை ஆராதித்து வருகின்றனர்.
3. வராக நரசிம்மர்.
மேல் அகோபிலத்தில், வேதாத்ரி, கருடாத்ரி, பவநாசினி என்ற மூன்று ஓடை அமைந்த பகுதியில் வீற்றிருக்கிறார். இங்கு லெஷ்மி நரசிம்மராகவும், பூமாதேவியை மடியில் தாங்கிய வண்ணம் வராக நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார்.
4. ஜுவாலா நரசிம்மர்.
மேல் அகோபிலத்தில், 3000 அடி உயரத்தில், பெரும் மலைகளுக்கும் மரங்களுக்கும் இடையே வீற்றிருக்கிறார். மூன்று கி;.மீ. மலைகளுக்கும் மரத்திற்க்கும் இடையே அடர்ந்த காட்டுப்பகுதியில், பாறாங்கற்கள்; மற்றும் ஓடை மீதும் நடந்து செல்ல வேண்டும். டோலியில் சென்றாலும், இந்த கடுமையான பகுதியில் இறங்கி நடந்துதான் செல்ல வேண்டும். அதை தொடர்ந்து 450 படிகட்டுகள் நடக்க வேண்டும்.
நரசிம்மர் காட்சி.
எட்டு திருக்கரங்களுடன், கண்களில் கோபக்கனல் தெரிக்க உக்ரமாக சேவைசாதிக்கிறார். இரண்டுகரங்கள் இரண்யன் கிரீடத்தை பற்றியும், இரண்டு கரங்கள் குடலை கிழித்த வண்ணமும், இரண்டுகரங்களில் சங்கு, சக்கரமும், இரண்டுகரங்களில் குடலை மாலையாக போட்டுகொள்ளும் வண்ணமும், சேவை சாதிக்கிறார். இங்கு பக்தர்களுக்கு பானகம் வழங்கப்படுகிறது. “உடல் அசதிக்கு இந்த பானகம் உயிராக இருந்தது”.
இங்கிருந்து தான் “உக்ரஸ்தம்பம்;” செல்ல வேண்டும், குறைந்தது இரண்டுமணி நேரமாகுமாம். உண்மையான மலை ஏற்றம் என்பது இதுதான். சென்று தரிசனம் செய்ய முடியாத ஏக்கம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது.
5. காரஞ்ச நரசிம்மர்.
இது மேல் அகோபிலத்தில் இருந்தாலும், இந்த இடம் வரை அனைத்து வாகணங்களும் செல்கின்றன. காரஞ்ச (காரைமரம்) மரத்தடியில் உள்ளார்.
இந்த ஷேத்திரத்தில், மேல் இரண்டு கரத்தில் சங்கு, சக்கரத்துடனும் கீழ் இரண்டுகரங்கள் தியான முத்திரையுடன், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கீழ் அகோபிலத்திலேயே அமைந்துள்ளதால் நாம் நம் வாகனத்திலேயே சென்று தரிசனம் செய்யலாம்.
ஆலமரத்தினடியில் இருந்து அருள்பாலிக்கிறார். சக்ரவடம் என்றால் ஆலமரம் என்று பொருள். நான்கு கரங்களில் இரண்டில் சங்கு. சக்கரமும், ஒன்றில் வரம் அருளியும், மற்றொன்றில், அபயம் அருளுகிறார். இவர் சன்னதியில் பாடினால் சங்கீதத்தில் புலமையடையலாம் என்ற நம்பிக்கை உள்ளது. நானும் ஒரு பாசுரம் பாடினேன்.
7. யோகாந்தநரசிம்மர். (தரிசனம்-2.12.23)
கீழ் அகோபிலத்திலேயே அமைந்துள்ளதால் நாம் நம் வாகனத்திலேயே சென்று தரிசனம் செய்யலாம்.
பிரகலாதனுக்கு யோக ஸாஸ்திரத்தை போதித்தவர். இரண்டுகைகளில் சங்கு சக்கரமும், மற்ற இரண்டு கரங்களில் யோக முத்திரையுடன், யோகநிலையில் சேவை சாதிக்கிறார் (காட்சித்தருகிறார்).
8. பாவனநரசிம்மர்.
இந்த நரசிம்மர் கீழ் அகோபிலத்தில் வீற்றிருந்தாலும், காட்டுபகுதிக்குள், அரசு அனுமதிக்கும் ஜீப்பில் 18 கி.மீ. பயணித்து பின் தரிசிக்க வேண்டும். வீற்றிருந்த கோலத்தில், நான்கு கரங்களில் இரண்டில் சங்கு, சக்கரமும், கீழ் வலது கரத்தில் அபயவரத ஹஸ்தமும், கீழ் இடது கரத்தில் மஹாலெஷ்மியை தொடையில் தாங்கி, ஆலிங்கனம் செய்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.
இங்கு வாழும் காட்டுவாழ் மக்களுக்கு இந்த நரசிம்மர் குலதெய்வமாக உள்ளார். இவர்கள் குலத்தில் மஹாலெஷ்மி அவதரித்து பெருமானை அடைந்ததால், இந்த நரசிம்மருக்கு, ஆடு, மாடு, கோழி, போன்ற மிருகங்கள் அர்பணிக்கப்படுகிறதாம்.
9 .பார்கவநரசிம்மர். (தரிசனம்-3.12.23)
கீழே அமைந்துள்ள இந்த நரசிம்மரை ஜீப்பில் சென்று தரிசித்தோம். காட்டுபகுதியில், அரசின் அனுமதி பெற்று, அனுமதி பெற்ற ஜீப்பில் மட்டுமே பயணிக்கவேண்டும். பாதை மிக கடினமாக உள்ளது.
பார்கவ தீர்த்தம் அருகில் நான்கு கரத்துடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். இரண்டு கரத்தில் சங்கு, சக்கரத்துடனும், இரண்யனை மடியில் கிடத்தில் மற்ற இரண்டு கரத்தால் குடலை கிழித்த வண்ணம் காட்சி தருகிறார்.
ஸதாநிகன் என்ற அரசன் அவன் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் நீங்க பார்கவ முனிவரின் வழிகாட்டுதல்;படி இந்த நரசிம்மரை வேண்டி, மக்களின் துன்பம் தீர்கிறார். மகரிஷி மற்றும் மன்னன் இருவருக்கும், இறைவன் காட்சியளிக்கிறார்.