திருவள்ளுர் வீரராகவ பெருமாள். (9.2.2022 தரிசன நாள்.)

 


இந்த திவ்யதேசத்தின் புராணப்பெயர் திருஎவ்வுள். இது 59வது திவ்யதேசம் ஆகும். திருமங்கைஆழ்வார், மற்றும் திருமழிசைஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

கோவில் வரலாறு.

சாலிஹோத்ரர் என்ற முனிவர் அரிசியை மாவாக்கி உணவு சமைத்து  அடியவர்களுக்கு கொடுத்து பின் தானும் உண்டு வந்தார். ஸ்ரீமன் நாராயணனே அடியவராக  வந்து உணவை உண்டுவிட்டு தனக்கு  பசிதீரவில்லை என்று கூறி முனிவரின் பங்கையும் வாங்கி உண்டு விட்டு, நான் எவ்வுள்கிடக்க (இளைப்பாற) என்று அந்த முனிவரிடம் கேட்கிறார். முனிவர் காட்டும் இடத்திலேயே பெருமாள் சயனித்து விடுகிறார்.  பெருமாள், வலது கரம் முனிவரை அனுக்கிரகம் செய்வது போன்றே, சயனித்துள்ளார். 

திருக்குளம்.

குளம் மிக பெரியதாக உள்ளது. பிணி தீர்க்கும் குளம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. வெல்லத்தை  இக்குளத்தில் கரைத்தால் நமது துன்பமும், நோயும் கரையும் என்று கூறப்படுகிறது. நோய் தீர்க்கும் இடம் ஆதலால், வைத்ய வீரராகவபெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். சிவபெருமான், தட்சனின் இறப்பு காரணமாக ஏற்பட்ட தோஷம்  நீங்க இக்குளத்தில் நீராடி தோஷ நிவர்தி பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.

தாயார்.

வசுமதி என்ற பெயரில், தாயார் திலிபமகராஜாவுக்கு, மகளாக அவதரித்து வீரராகவனையயே கரம்பிடிக்கிறார். திலிபராஜாவுக்கு ஒரே மகள் என்பதால் மகளைப்பிரிய  அரசனுக்கு மனம் இல்லாத காரணத்தால், பெருமாள் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்று வாக்குறுதிஅளிக்கிறார்.  

தை அம்மாவாசை சிறப்பு.

தை மாதம் அம்மாவசையன்று இறைவன் காட்சி கொடுத்தமையால், இன்நாளில் மக்கள் திரளாக தரிசனத்திற்க்கு வருகின்றனர்.

சிவன் கோவில்.

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்தீஸ்வரர். பல்லவ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோவில், 3 நிலை கோபுரத்துடன்; வழக்கமான சிவன் கோவில் போன்ற இறை சன்னதிகளுடனும், வள்ளலார் சாமிகளுக்கும் ஒரு தனி சன்னதயும், அமைக்கப்பட்டிருந்தது. புனரமைபுப்பணி நடைபெறுகிறது.

;   


திருவண்ணாமலை மாவட்ட தேவார பாடல் பெற்ற தலங்கள். (தரிசனநாள் 26.1.2022).

 

குரங்கணில் முட்டம், செய்யாறு, திருப்பனங்காடு, திருவண்ணாமலை, தண்டரை என்று ஐந்து திருதலங்கள் உள்ளன.  



செய்யாறு வேதபுரீஸ்வரர்.

புதுவையில் இருந்து திண்டிவனம் வந்தவாசி வழியாக செய்யாரை அடைந்தோம்.  தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதம் ஓதி அருளியமையால் ஓத்தூர் என்றும், திரு என்ற அடைமொழியுடன். திருஓத்தூர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் மீது திருஞானசம்மந்தர் பதிகம் பாடியுள்ளார். 5 ஏக்கர் நிலபரப்பு, 7நிலை ராஜகோபுரம், 2 பிராகாரம் இவற்றுடன் திருக்கோவில் மிக சிறப்பாக உள்ளது. நந்தி, வேதபுரீஸ்வரரை பார்த்து இல்லாமல், முன்கோபுரத்தை பாரத்;தார் போல் உள்ளது.

    ஆண் பனை மரத்தை பெண்மரமாக சிவபெருமான் அருளுடன் மாற்றினார் ஞான சம்மந்தர் என்றும், சமண மதத்தினர் யாகம் செய்து 5 தலை நாகத்தை ஞானசம்மந்தர் மேல்  ஏவிவிட்டனர் என்றும் சிவபெருமான் படம் எடுத்த நாகத்தை அடக்கி ஞானசம்மந்தருடன் இக்கோவிலுக்குள் புகுந்தார் என்று இத்தல பதிகத்தின் மூலம் தெரிகிறது. 

     பஞ்சபூத லிங்கங்கள் பிராகாரததில் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களை தரிசனம் செய்தால் பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் என்ற பஞ்சபூத தலங்கள் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. 

      மகா மண்டபம் நடுவில் நின்றால் சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகம் ஆகிய சன்னதிகளை ஓரே நேரத்தில் தரிசனம் செய்ய ஏதுவாக கோவில் கட்டிடக்கலை அமைந்துள்ளது.

   முருகன் இறைவனை பூஜித்ததலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில் “திருவோத்தூதனில் மேவும் பெருமாளே” என்று முடித்துள்ளார். 


குரங்கணில்முட்டம்.

வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் காகம் (முட்டம்) வடிவிலும் வந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றமையால் இந்த தலம் குரங்கணில் முட்டம் என்ற பெயர் கொண்டது. வந்தவாசி காஞ்சிபுரம் செல்லும் வழிதடத்தில் தூசி என்ற கிராமம் சென்று அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. 

வாலி இறைவனை வழிபட்டபோது  மரத்தில் இருக்கும் பூக்களை இறைவனுக்கு மரத்தை உலுக்கியப்படியே சமர்ப்பித்தமையால் (கொய்யாமல், பறிக்காமல்) கொய்யாமலைநாதர் என்று இறைவன் பெயர் கொண்டார். இங்கு இறைவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. 

இந்திரன்(அணில் வடிவம்)

கௌதம முனிவர் மனைவி மீது ஆசை கொண்ட காரணத்தினால் உடல் முழுவதும்  கண்னாக தெரியும்படி சாபம் பெறுகிறார். அணிலாக மாறி பூலோகம் வந்து இந்த தலத்தில் சாப விமேசனம் பெறுகிறார் இந்திரன்.

எமன் (காகம் வடிவம்).

 மார்கண்டேயனுக்கு  16 வயது முடிவடைந்தவுடன், அவன் மீது பாசக்கயிறு வீசிய போது இறைவன் மீதும் அது விழுந்தமையால் ஏற்பட்ட பாவம்,  விமோசனம் பெற, காகம் உரு எடுத்து இத்தலத்தில் விமோசனம் பெறுகிறார்.

வாலி (குரங்கு)

சிவ பக்கதனான வாலி இத்தல பெருமையை அறிந்து இங்கு வந்து வழி;பட்டார்.

இவ்வாறு மூவரும் விலங்கு உருவத்தில் இருந்து வழிபட்டு  ஞானம் அடைந்ததால். மனிதனாகிய நமக்கும் ஞானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பிற சிறப்புக்கள்.

1. மூவரின் வேண்டுதலுக்கு இனங்கி சுயம்பு மூர்தியாக தோன்றிய லிங்கம்.

2. சித்திரை மாதம் குறிப்பிட்ட காலத்தில் இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது.

 3. முக்தி கிடைக்கும் தலம்.



திருப்பனங்காடு

இக்கோவிலில் இரண்டு ஈஸ்வரன், இரண்டு அம்பிகை, இரண்டு பலிபீடம் இரண்டு நந்தி என்று ஒரே கோவிலுக்குள் இரண்டு கோவில்கள் போன்று அமைக்கப்பட்டுள்ளது. “இறைவன் நான் பனங்காட்டிற்க்கும், வன்பாக்கத்திற்க்குமாய் இருப்பவன்” என்று கூறியதால் 

வன்பார்தான் பனங்காட்டூர் என்று சுந்தரர் பாடினார்.  பனைமரக்காடாக இந்த இடம் திகழ்ந்தமையால் திருப்பனங்காடு என்று அழைக்கப்படுகிறது.   அருகில் உள்ள இந்த வன்பாக்கம் என்ற இடத்திலும் ஒரு சிவன் ஆலையம் உள்ளது. இந்த இடம் இப்பொழுது வெண்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.. தீர்தமும் இரண்டு உள்ளது.

அகத்தியர்.

ஆகத்தியர் பூஜித்த போது இறைவன் ஜடாமுடியிலுள்ள கங்கை தீர்தமாக வெளிப்பட்டதே இந்த சடாகங்கை. அமிர்தவல்லி சமேத தால புரீஸ்வரர் (தாலம் என்றால் பனை என்று பொருள் பனை-Palm).  ஆகத்தியர் வழிபட்ட இறைவன் என்று கூறுகின்றனர்.

புலஸ்தியர்.

இந்த முனிவர் வழிப்பட்ட இறைவன் கிருபாநாயகி சமேத கிருபாநாதேஸ்வரர். 

 சுந்தரருக்கு இறைவன் உணவு அளிக்கும்பொழுது  அவருடைய காலால் கிளறி உண்டாக்கியது என்று ஒரு செவிவழி செய்தி உள்ளது.

இந்த மூன்று ஆலையங்களிலும் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. குடமுழக்கு நிறைவடைந்து பின் நாங்கள் மீண்டும் இந்த தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு, தண்டரையில் உள்ள  பீமேஷ்வரரையும் தரிசிக்க எங்களுக்கு அருள் புரிய இறைவனை வேண்டி திரும்பினோம்.






திருநின்றவூர் (20.1.2022- தரிசன நாள்)


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 29 கி.மீ. தொலைவில், திருவள்ளுர் மாவட்டத்தில்  உள்ளது.

பக்தவச்சல பெருமாள் கோவில்.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில். 58 வது திவ்யதேசம். 




கோயில் வரலாறு.

சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட அலைமகள், இங்கு வந்து நின்றமையால் திருநின்ற ஊர் என்று அழைக்கப்படுகிறது. சமுத்திர ராஜன் திருமகளின் கோபம் தீர்க்க, பலவாராக வேண்டுகிறார். அப்பொழுது “என்னை பெற்ற தாயே” என்று சொன்னதால். இந்த தலத்தில் தாயாரின் பெயர் என்னை பெற்ற தாயார் என்று அழைக்கப்படுகிறது. சமுத்திர ராஜன் பலவாராக வேண்டியும் திருப்பாற்கடல் திரும்பாததால், திருமாலும் லஷ்மி தேவியை அழைக்க விழைகிறார். பக்தனுக்காக  திருப்பார்கடலில் இருந்து திருநின்றஊருக்கு வந்தமையால் பக்தவச்சல பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ இருதயாலீஸ்வரர் திருக்கோவில்.

பூசலார் நாயனார் மனதினால் எழுப்பிய கோவில். 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் என்பவர் ஒரு லிங்கத்தை காண்கிறார். அங்கு ஒரு சிவாலயம் கட்ட எத்தனிக்கிறார் அதற்கான பொருள் வசதி அவரிடம் இல்லாததால் மனதிலேயே ஒரு ஆலயத்தை கட்டுகிறார். காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் ஒரு சிவாலயம் கட்டி குடமுழுக்கு நாள் குறிக்கிறார். ஆதே நாளில் பூசலாரின் மனக்கோவில் குடமுழுக்கும் அதே நாளில் அவர் குறித்துள்ளதால், இறைவன் மன்னின் கனவில் வந்து பூசலாரின் மனதினால் கட்டிய கோலிலை பற்றி கூறி, பூசலாரின் பக்தியை பல்லவ மன்னன் மூலம் உலகுக்கு எடுத்து காட்டி, பூசலாரின் மனக்கோவில் போன்றே,  மன்னனின் உதவியடன் கட்டியதே, இந்த இருதயாலீஸ்வரர் கோலில். சிவனுக்கு அருகிலேயே பூசலார் சிலையும்  அமைந்துள்ளது.  


ஏரிகாத்த ராமர் கோவில்.

பக்கதவச்சல பெருமாள் கோவில் பின்புறத்தில் ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார், ஏரி காத்த ராமர். திருநின்றவூர் ஏரி தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய ஏரி என்று கூறப்படுகிறது. 16 கிராமங்களுக்க நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக ஊரே வெள்ளத்தில் மூழ்கியது, ஆங்கிலேய ஆளுனர் மதுராந்தகம் ஏரியை, ராமர் காத்து அருளியதை, இவ்வூர் மக்கள் மூலம் கேட்டு, ராமபிரானை வேண்ட ஒரே நாளில், நீர் அனைத்ததும் ஏரியில் அடங்கியது. ஊரிமக்களின் ஒத்துழைப்புடன் கோவிலை நிர்மாணிக்க ஆனைபிறப்பித்தார்.  இந்த ராமரும் ஏரிகாத்த ராமர் என்றே அழைக்கப்படுகிறார். இந்த ஏரிக்கு வருணபுஷ்கரணி என்று பெயர். ராமர் 6அடிக்கு மேல் ஆஜானுபாகுவாக சீதை இலக்குவணன் உடன் அருள்பாலிக்கிறார்.


இந்த மூன்று கோவில்களும் அருகருகே அமைந்துள்ளன்.   






சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...