புதன் தலமும் பூம்புகாரும்.

 புதன் தலமும் பூம்புகாரும். (24.7.2021)

எங்கள் வீட்டின் விருந்தினர் விருப்பதிர்கிணங்க திருவெண்காடு கிளம்பினோம்; எங்களின் (நான்,என்கணவர்) பாடல் பெற்ற தலயாத்திரையுமாக அமைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. சீர்காழியில் இருந்து 12 கி.மீ. தொலைவில்,  17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 3குளங்களை உள்ளடக்கிய, பெரிய சுற்றுப்பிரகாரமும் கொண்ட, மிக எழில் நிறைந்த, இரண்டு வாயில்களை கொண்ட சிவன் கோயிலாகும்.

இக்கோவிலின் சிறப்பு


1. ஆகோரமூர்த்தி – 

சிவபெருமானின் அம்சங்களுள் ஒருவர்.  இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் அகோரமூர்த்தி சன்னதி கிடையாது. அருகிலேயே உற்சவமூர்த்தியும் உள்ளது. தட்சனின் யாகத்தை அழிக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணில் தோற்றுவிக்கப்பட்ட அகோரவீரபத்திரர்  வேறு. இந்த தலத்தில் அமைந்துள்ள அகோரமூர்த்தி வேறு.  மருத்துவாசுரன்,  பெற்ற வரம் காரணமாக தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமான் அருளியபடி திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்தனர். அசுரனை எதிர்கொள்ள வெண்காட்டீஸ்வரர்; நந்தியை  பணித்தார். நந்தியிடம் தோல்வி அடைந்த பின் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, சூலத்தை பெற்றான் அசுரன். நந்தியை சூலத்தால் தாக்கி காயத்தை ஏற்படுத்தினான். நந்திகேஸ்வரர் திருவெண்காட்டாரிடம் முறையிட, சிவபெருமான் உடனே அகோரமூர்தியாக உருகொண்டரர். மருத்துவாசுரன் உருவத்தை பார்த்த மாத்திரத்தில் சரணடைந்தான். மருத்துவாசுரனை சிவன் காலடியில் காணலாம். 

2;. சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலம்.(தேவாரம்,திருவாசகம்)

3. சுயம்பு மூர்தியாக அருள்பாலிக்கிறார்.

4. சிவபெருமான் ஆனந்ததாண்டவம் புரிந்த இடம்.

5.108 சக்திபீடங்களில் ஒரு தலம்.

6. நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிப்பட்ட தலம். பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர்  அருள் கிடைக்கப்பெற்றோம.;





பூம்புகார்.

திருவெண்காட்டில் இருந்து 9 கி.மீ. தொலைவுதான் பூம்புகார். வுரலாற்று சிறப்புமிக்க இடம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தின் நகரம் இதுதான். சோழர்காலத்தில் பெரிய துறைமுகமாக இருந்த இடம். வரலாற்று பெயர் காவிரிபூம்பட்டிணம். தற்கால பெயர் பூம்புகார். சிறந்த சுற்றுலா இடம், சரியான பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்று அருவருப்பை ஏற்படுத்தியது. “சிலப்பதிகார கலைக்கூடம்” பராமரிப்பு பணி நடந்து கொண்டிருந்தது. கலைக்கூடத்தின் உள்ளே கோவலன், கண்ணகி, சிலைவடிவிலும், வெளிப்பகுதியில், சிலப்பதிகார காப்பியத்தை எழுதிய இளங்கோவடிகளுக்கு (இதில் பல கருத்து வேறுபாடுள்ளது) சிலையும் உள்ளது. சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் நீரூற்று அவற்றை உடனே பார்த்து ரசித்து இன்புர, யூ. டியுப் க்கு சென்று, காஞ்சி பட்டுடுத்தி என்று பாடலை தேடலில் தேர்வு செய்து பாட்டின் சரணத்தை (ஒரு பாடலின் நிறைவு பகுதி) பார்த்து மகிழ்ச்சிஅடையுங்கள் (பூம்புகாரின் நாயகியாம் என்று தொடங்கும்).       







No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...