திருச்சோபுரம் மற்றும் திருத்தினை நகர் என்ற தீர்த்தநகரி;. (2.8.21).
திருச்சோபுரம், கடலூர்-சிதம்பரம் செல்லம் வழியில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை அடுத்து, 1கி;;மீ. தொலைவில் இடதுபுறம், திருச்சோபுரம் என்ற பெயர் பலகையே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் திருச்சோபுரநாதர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீ சத்தியாயதாட்சி சமேத ஸ்ரீ மங்களபுரீஸ்வரர் (எ) அருள்மிகு மங்களாம்பிகை உடனுறை திருச்சோபுரநாதர் தல வரலாறு. அகத்திய மாமுனிவர் கடல் மணலுடன் மூலிகைச்சாறு கலந்து, இறைவனை உருவாக்கி, இறைவனின் திருமணக்கோல காட்சியை காண வேண்டுகிறார். மூலிகை மணல் கலந்த லிங்க திருமேனியுடன் அருள்வதால், அபிஷேக திரவியங்கள் மருந்துவகுணம் கொண்டதாக நம்பப்படுகிறது. இங்கு வீற்றிருக்கம் தட்சிணாமூர்த்தி இசை கடவுளாக வணங்கப்படுகிறார். இவரது திருமேனியில் இருந்து ஸ்வரங்களின் ஓசை உண்டாகிறது. திருஞானசம்மந்தர்,சுந்தரர் இவர்களால் பாடல் பெற்ற தலமாகும். இராமலிங்க சுவாமிகளும் இத்தல இறைவனை போற்றி பாடியுள்ளார். 11ஆம் நூற்றாண்டிற்கு பிறகு ஏற்பட்ட கடற்கோளினால் (கடலுக்க அடியில் ஏற்படும் நிலநடுக்கம்) கோவில் மணலால் மூடப்பட்டு, பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, மதுரை தம்பிரான்களால் மீட்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.
திருத்தினைநகர்(எ)தீர்த்தநகரி.
கடலூர்-சிதம்பரம் வழியில் ஆலப்பாக்கம் ரயில்வேகேட்டை தொடர்ந்து, வலதுபுறம் மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவிலேயே இந்த தலம் அமைந்துள்ளது.அருள்மிகு.கருத்தடங்கண்ணி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலையம் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்றதாகும். (நீறு தாங்கிய திருநுத லானை என்ற பதிகம்)
No comments:
Post a Comment