தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சி.
கல்லூரி நாட்களில் என்னுடன் பயின்றவர்களில் சிலபேர் தட்டச்சு பயிற்சி மற்றும் ;சுருக்கெழுத்து பயிற்சிக்கு சென்றனர். நானும் தஞ்சாவூர் வீனஸ் தட்டச்சுப்பயிலத்தில் ஆங்கில தட்டச்சும், சுருக்கெழுத்தும் சேர்ந்தேன.; சுருக்கெழுத்தில் 25 பாடம் எழுதி எனக்கு ஆர்வம் இல்லாமல் பயிற்ச்சியை கைவிட்டேன். ஆங்கில தட்டச்சில் கீழ்நிலைமுடித்து, மேல்நிலை தொடர்ந்தவுடன் தமிழ் தட்டச்சுப்பயிற்ச்சியையும். தொடர்ந்தேன். தட்டச்சில் ஆங்கிலத்தில் மேல்நிலையும், தமிழில் கீழ் நிலையும் ஒரே நேரத்தில் தேர்வெழுதி இரண்டிலும். தேர்ச்சிபெறவில்லை. கல்லூரி படிப்பு முடிந்ததால் என்னால் பயிற்ச்சியை தொடர முடியவில்லை. திருமணத்திற்க்கு பிறகு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மாம்பலம் டெக்னிக்கள் பயிலகத்தில் ஆங்கில மேல்நிலையை முடித்து என்னடைய மாமனாரிடமே பணியாற்றலாம் என்று நினைத்த நிலையில், என்னுடைய மாமியாரின் கடும் எதிர்ப்பு காரணமாக என்னடைய எண்ணத்தை கைவிட்டேன். என்னுடைய மாமனார் ஒரு அலுவலகம் (Tax and Investment Consultancy ) நடத்திக்கொண்டிருந்தார். அவரிடம் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அல்லாத அவசர நிலையில் 4 கடிதம் அடித்துக்கொடுத்திருக்கிறேன். இவ்வளவுதான, என்னுடைய தட்டச்சு அனுபவம். புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பொழுது, அங்கு இருந்த ஒரு செய்தி தட்டச்சு செய்யும் பணியாளர் என்னிடம் உங்களை போன்று செய்தி வாசிப்பாளர்கள் வர வில்லை என்றால் R.J(Radio Jockey) வாசித்துவிடுவார்கள். நாங்கள் வரவில்லலை என்றால் தான் கடினம் என்றார். மறுநாளே என்வீட்டின் அருகில் உள்ள தட்டச்சு பயிலகத்தில் என்னடைய தமிழ் தட்டச்சு பயிற்ச்சியை தொடர்ந்தேன், இரண்டு மாதத்திற்க்கு மட்டும் சுமார் ஒரு மணிநேரம் பயிற்ச்சிசெய்து என்னால் முடியும் என்ற நிலைக்கு வந்தவுடன் அதே வடிவில் உள்ள சங்கம் என்ற மென்பொருளை பதிவறக்கம் செய்ய முயற்ச்சித்தேன். என் நண்பர்கள் மத்தியில், மென் பொருள் பதிவிறக்கம் செய்து தருவார் என்று கூறி ஒருவரை பரிந்துரைத்தனர். அவரை பல முறை கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் இதோ வருகிறேன் என்பார் அவ்வளவுதான். இவ்வாறு பல முறை தொடர்பு கொண்டு வெறுத்துப்போய் இந்த முயற்ச்சியை கை விட்டேன். சமூக நல துறையில் நான் ஓர் ஆண்டு காலம், அங்கு வரும் பெண்களுக்கு மனஆறுதல் கூறியும், குடும்ப வன்முறை சட்டத்தின் உட்பிரிவுகளை தெரிந்து கொண்டு, அவர்களின் வழக்கை பதிவு செய்ய அறிக்கையை எழுதியும் கொடுத்துக்கொண்டிருந்தேன். இன்நிலையில் அங்கு சந்தித்த ஒரு பெண், பாமினி என்ற மென் பொருளை பயன்படுத்துவதாக சொல்லி, அதனை எனக்கு மின் அஞ்சலும் செய்தார். குடும்ப நண்பரின் உதவியுடன் அதை வீட்டு கணிணியில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயிற்ச்சி செய்து. மாதாந்திர மற்றம் வாராந்திர பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் மற்றம் வாசகர்களின் கருத்துக்களை எழுதி மின்அஞ்சல் மூலம் அனுப்பினால் அந்த எழுத்துக்களை எல்லா கணினியும் ஏற்காது என்பதை தெரிந்து கொண்டு, பின் என்னுடைய மகனின் உதவியுடன் Bamini Unicode ல் Convert செய்து அனுப்ப கற்றுக்கொண்டேன். தற்சமயம் என்னடைய சிறிய மற்றம் சுவையான அனுபவங்களை Blogகாக போட என்னுடைய தட்டச்சு பயிற்ச்சி பயன்படுகிறது. (இந்த தட்டச்சு பயிற்ச்சிக்கு உதவிய என்னுடைய தோழிகள் விஐயா மற்றும் கலைவாணிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)
தவறுகளைத் களைந்து publish செய்தால் நலம்
ReplyDeleteதவறு உள்ள இடத்தை சுட்டிக்காட்டினால் தவறுகளை களைய எனக்கு உதவியாக இருக்கும்.
Delete