சுந்தரியும் வானொலியும்.
நான் தெருவில் என்னுடைய அக்காகளுடன் விளையாடிக்கொண்டிருக்கம் பொழுது அக்கா இருவரும் முன்அறிவிப்பின்றி வீட்டிற்க்கு சென்றுவிட்டனர். எனக்கு காரணம் தெரியவில்லை. வீட்டிற்க்கு சென்று பார்த்தால் இருவரும் வானொலி கேட்டுக்கொண்டிருதனர். அதில் எங்களை போல் சிறுவர்கள் ஏதேதோ பாடினர் ,பேசினர் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் என்றால் எங்கள் வீட்டில் வானொலி கிடையாது. ஏன் விளையாட்டை பாதியில் விட்டு வந்தீரகள் என்று கேட்டதற்க்கு” பிள்ளை கனியமுது” கேட்பதற்க்கு என்றனர். பின்னாளில் அது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்ச்சி ஏனோ மிகவும் பாதித்தது. எங்கள் வீட்டிற்க்கு வந்த உடன் என் அப்பாவிடம் அவர்கள் வானொலியில் பாட்டு கேட்டுக்கொண்டே இருந்தனர் என்னுடன் விளையாட வில்லை என்று புகார் தெரிவித்தேன். என்னடைய அப்பா உடனே நீ இந்த வானொலியிலேயே பேசும் வேலைக்கு போகலாம் என்று என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அவர் சாதாரணமாக சொன்ன சொல் என் மனதில் கல்லில் வடித்த எழுத்தாக படிந்து விட்டது. இதன் மீது மறதி என்ற தூசு சில ஆண்டுகள் படிந்திருந்தது. 1976,77. ஆண்டுகளில் நாங்கள் குடித்தனம் இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்க்கு சாரதா, சுகந்தி என்ற சகோதரிகள் அடிக்கடி வருவார்கள் அவர்களுடைய பெயரை நானும் அடிக்கடி திருச்சிஅகில இந்திய வானொலியில் கேட்டிருந்தேன் (நிகழ்ச்சி கருத்து தெரிவிப்பவரிகள்ன் பெயர்கள் இடம்பெறும் நிகழ்ச்சியில் மகராஐபுரத்தை சேர்ந்தJ.. சாரதா மற்றும் J. சுகந்தி சகோதரிகள் என்று இவர்களுடைய பெயர்கள் அடிக்கடி ஒலிக்கும்) இவர்களை பற்றி வீட்டின் உரிமையளர் எனது அம்மாவிடம் தெரிவித்து கொண்டிருந்தார். இதை கேட்ட நான் அவர்களை தெய்வத்தை பார்பது போன்று பார்க்க தொடங்கினேன். அவர்களில் அருகில் அமர்ந்து மிகவும் மெல்லிய குரலில் உங்களுடைய பெயர் வானொலியில் எப்படி வருகிறது என்று அடிக்கடி கேட்பேன். அவர்கள் இருவரும் புன்னகையை மட்டுமே பதிலாக அளிப்பார்கள் எப்பொழுதும். மீண்டும் என்னடைய அப்பாவிடம் புகார் செய்தேன். என்னுடைய அப்பாவும் மீண்டும்அதையே பதிலாக அளித்தார். ஆனால் முதல் முறை அளித்த பதில் நான் வானொலி வாங்கிகொடுங்கள் என்று கேட்டு விடுவேனோ என்பதற்காக. இரண்டாவது முறை உண்மையாகவே அதற்கான செய்தியை சேகரித்து வைத்திருந்தார் என்பதை 1985 ஜனவரி மாதம் இளையபாரதம் நிகழ்ச்சிக்காக நான் திருச்சி அகில இந்திய வானொலிக்கு விண்ணப்பித்த போது தெரிந்து கொண்டேன். பிப்ரவரி 18 ஆம் தேதியன்று நானும் என்னுடைய அப்பாவும் குரல் வளத்தேர்வுக்காக திருச்சிராப்பள்ளிக்கு கிளம்பினோம். திருச்சி வானொலியில் இளைய பாரத நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு 1989 ஜனவரி வரை 3 மாதங்களுக்கு ஒரு நிகழ்ச்சி பங்கு கொண்டு வந்தேன். காலை மாநிலச்செய்திகள் முடிந்தவுடன் இன்றைய நிகழ்ச்சிகள் என்று அன்றைய நிகழ்ச்சிகளை அறிவிப்பார்கள் அதில் இரவு எட்டுமணிக்கு இளையபாரதம் பங்குகொள்பவர் ஜி. சுந்தராம்பாள் என்று என்னுடைய பெயரை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சி பின் நாளில் யார் அழைத்தும் கிடைக்கவில்லை.திருமணத்திற்க்கு பின் என்னுடைய கணவர் சென்னையில் பணியாற்றியவரை சென்னை அகில இந்திய வானொலியில் இளையபாரத நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தேன். இடையில் 1991 ல் பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணபித்து தேர்வு செய்யப்படவில்லை, சென்னையில். ஆனால் கணவரின் பணி மாற்றம் காரணமாக தொடர்ந்து என்னால் பங்குகொள்ள முடியவில்லை. மீண்டும் 2003 புதுச்சேரி வானொலியில்(கணவரின் பணி மாற்றம்) மங்கையர் உலகு என்ற மகளிர்கான நிகழ்ச்சியில் என்னுடைய பங்கை தொடர்ந்தேன்.
என்னுடைய விருப்பத்திற்க்கு செவிசாய்த இறைவனின் அருளால் ஏழு ஆண்டுகள் (2011 ஆகஸ்ட் முதல் 2018 ஆகஸ்ட் வரை). செய்தி வாசித்துக்கொண்டிருந்தேன்.
சமுதாய வானொலியிலும் (Community F.M) என் பங்கு அதிகமாக இருந்தது. சர்வம் என்ற புதுச்சேரி அரவிபிந்ஆசிரமத்தின் சமுதாய வானொலியில் பல நிகழ்ச்சியில் பங்குகெண்டுள்ளேன்.
புதுச்சேரி பல்கலைகழக சமுதாய வானொலி என்று என்னுடைய வானொலி பணி தொடர்ந்ததுக்கொண்டே இருந்தது. வானொலி மேல் எனக்கு இருந்த அன்பு என்றும் தொடரும். ஆனால் நான் இப்பொழுது நான்; கேட்கும் புது வடிவ வானொலி CARVAAN இதில் F.M.. இருந்தாலும் நான் இதை பயன் படுத்துவதே கிடையாது. யார் பெயரும், யார் குரலும் கேட்காத இந்த வானொலியை நான் மிகவும் நேசிக்கிறேன்.
வீட்டிற்கு கேட்பதற்கு என்று போட்டால் போதுமே.
ReplyDeleteற்க்கு ற்க்கு. என்று முறுக்கு சுற்ற வேண்டாம்.
முன் பாதி உருக்கமான உண்மை.
நன்றி 🙏
DeleteNice post aunty. Good to know you have put efforts to achieve your dream to work in AIR.
ReplyDeleteThank u
DeleteReally great
ReplyDelete