தையலை கற்றாள் தையல்
பழைய தையல் மிஷின் விற்பனைக்கு என்று வாசலில் போட்ட விற்பனை பலகையை கழட்டினேன். ஏன் என்று கேட்ட கணவருக்கு பதில் சொல்ல எத்தனித்தபோது, இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அம்மா ஆடையை தைத்து கொடுத்தாலும் எனக்கு மனநிறைவே கிடைக்காது. நீங்கள் தையல்காரர் போன்று நன்றாகவே தைக்கவில்லை. என்று எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பேன். என்னடைய திருமணத்ததிற்க்கு ரவிக்கை தைக்க தையல்காரரிடம் கொடுத்தேன். வரலாற்று நாவலில் வரும் நிலவறையில் இருந்தால் எப்படி மூச்சு முட்டுமோ அதுபோன்று இருந்தது. எத்தனை திருத்தம் செய்தும் ரவிக்கை தேறவில்லை. நல்ல காலம் “ஒரு பிளவுஸ் கொடு “ என்று அம்மா சொன்ன அறிவுரையால் பிழைத்தேன். மீண்டும் அம்மாவே ஆஸ்தான தையல்காரராக மாறினார்.சென்னைவாசியாக மாறிய பிறகு எனது நாத்தனாரின் பரிந்துரையின பேரில் ஒருதையல்காரரிடம்; இடம் கொடுத்ததில் (printed silk saree attached blouse) நாசம். கையையே ஏற்ற முடியவில்லை. திருத்தம் செய்ய வாய்பே இல்லாமல் தையல் பிரிக்க இடமே இல்லாமல் கத்தரித்து ஒவர்லாக் செய்து வைத்திருந்தார். அப்பொழுதான் நானே தைத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. அம்மா தைத்ததையும், வகுப்பு எடுத்ததையும் பார்த்துக்கொண்டே இருந்ததால் என்னால் நன்றாக தைக்க முடிந்தது.” காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பார்களே அது போன்று எனக்கு தோன்றியது போலும். ஆனாலும் நான் தைத்தது மன நிறைவை ஏற்படுத்தியது. என் நாத்தனார் அவர்வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வாங்கி கொடுத்த ஆடைக்கு நான் மட்டுமே ரவிக்கை தைத்து போட்டுக்கொண்டு வந்தேன். மற்றனைவரும் மிக குறுகிய காலம் என்பதால் தையல்காரரிடம் கொடுத்து தைத்துக்கொள்ள முடியாமல் இருந்தனர். (பெருமையில் பூரித்து போனேன்) தாய்மை காரணமாக மீண்டும் தையல்காரரை அணுக வேண்டிய நிலை. தீபாவளிக்கு வாங்கிய இரண்டு ரவிக்கையை தொலைத்து சாதனை படைத்தார் தையல்காரர். பல மாதங்கள், அவருடன் சண்டைபிடித்து கடைக்குள் சென்று என்னுடைய பொருளை தேடி எடுத்துக்கொண்டேன். நல்ல காலம் அளவு பெரிதாக இருந்ததால் நானே சரி செய்து கொண்டேன். இரண்டாவது முறை தாய்மை அடைந்த பொழுது இரண்டு ஆண்டுகள். நான் புதிய ஆடையை நினைத்துக்கூட பார்க்க வில்லை. 18 ஆண்டுகள் சுயமாக தைத்துகொண்டிருந்த எனக்கு அவசரநிலை காரணமாக ஒரு பெண்மணியிடம் தைத்துக் கொண்டேன். சில காலம் அந்த பெண்மணியிடமே தைக்க ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் 6 ரவிக்கைகள் தைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, அனைத்தையும் உயரம் மிக குறைவாக தைத்து விட்டார். நான் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்க்கு மிகவும் கோபமாக பேசி துணி போதவில்லை என்று பொய் சொன்னது எனக்கு மிகவும் சினத்தை உண்டு செய்தது. ஒரு மீட்டர் துணியில் எத்தனை இஞ்ச் உயரம் வரை வைக்கலாம் என்று கூறி, எனக்கும் நன்றாக தைக்க தெரியும் என்று சொல்லி; திரும்பினேன். மீண்டும் சுயமாக தைக்க ஆரம்பித்தேன். என் வீட்டிற்க்கு பக்கத்தில் ஒரு பெண்மணி வீடு கட்டி கொண்டு வந்தார். அவர் நான் தையலை தொழிலாக வைத்துள்ளேன். நான் தைத்து தருகிறேன் என்றார். 2வருடம் நன்றாக தைத்து கொடுத்திருப்பார். சமீபத்தில் துணி தைக்க கொடுத்து எட்டு மாதங்கள் முடிந்து விட்டது (டிசம்பர்) இதுவரை கொடுக்க வில்லை. இப்பொழுது நானும் வீட்டில்தான் இருக்கிறேன் (கொரோனா) நானே தைத்துக்கொள்கிறேன,; என்றாலும் திருப்பித்தராமல் நானே தைத்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி வீனாக நாட்களை கடத்திக்கொண்டே செல்கிறார். இப்பொழுது உங்களுக்கும் புரிந்து இருக்கும் நான் ஏன் விற்பனை பலகையை அப்புறப்படுத்தினேன் என்று.
விற்பனை பலகையை கழட்டிய நான், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தையல் இயந்திரத்தை என்னுடைய தோழி ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பல தேடுதலுக்கு பிறகு இந்த, Brother Mechine வாங்கினேன். எனக்கும் என்னுடைய பேத்திக்கும் ஒரே மாதிரி துணி வாங்கி, ஆடைதைத்தேன். ஆடையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன். மீண்டும் என்னுடைய விருப்பத்தை தொடர்ந்தேன்.
👌👏👏👏
ReplyDelete👍😁
Deleteஅட்ரஸ் தாங்க . நான் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது சொல்லி தெரியாது .நம்பி எங்கும் வருகிறேன்
ReplyDeleteCool cool mam🙏🌹
DeleteGud effort Madame
ReplyDeleteladies in south India so many stories with our professionnels tailors really we have à big targedy with them..
20011 I also had à stories Tat I came to India for puberty function to my elder daughter I gave my blouse and my daughter to the one ladies tailor in 100ft Road unfortunatly they stiched my blouse to my daughter size I checked one hrs before function really I got stressd. they stichting chargés ws for 1000rs per blouse...
So everyone had bitter experience.
DeleteGud effort Madame
ReplyDelete