COMPLAN பாட்டி

நாங்கள் குடிஇருந்த வீட்டின் உரிமையளர் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அவரை Complan பாட்டி என்று தான் கூப்பிடுவேன். அவருக்கு பிரதான உணவே காம்பிளான் தான். வீடு முழுவதும் நாங்கள் தான் பயன்படுத்திக்கொள்வோம். உரிமையளர் பாட்டி இரண்டு பெட்டிகளை கூடத்தின் ஒரு ஓரத்தில் தடுப்பாக கொண்டு அந்த இடத்தை மட்டும் பயன் படுத்திக்கொள்வார். ஒரு பெட்டியில் வீணை மற்றொண்டில் பாத்திரம் மற்றும் ஆடை என்று மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இருக்கும். பாட்டி உடம்பில் எலும்பு மற்றும் தோல் மட்டுமே இருக்கும் அவ்வளவு ஒல்லியாக இருப்பார். நாங்கள் குடிஇருந்தவரை உறவு நட்பு என்று எவருமே பாட்டியை பார்க்க வந்ததில்லை. மிகவும் அபூர்வமாக வீணை வாசிப்பார். பாடடிக்கு பலகலைகள் தெரியும் என்று நினைக்கிறேன் . ஒரு முறை காம்பிளான் பாட்டி அவர் தேவைக்கான ரவிக்கையை அவரே தைத்துக்கொண்டார். தைத்துக்கொள்வது அதிசியமன்று தைத்த முறை என்னை ஆச்சரியமடைய செய்தது என்னிடம் பென்சில் வாங்கி அளவை குறித்துக்கொண்டு ;அரிவாள் மணையில் வெட்டி புத்தகம் தைக்கும் ஊசியை பயன் படுத்தி தைத்து முடித்துவிட்டார். மிகவும் அபூர்வாக என் அம்மாவிடம் சாதம் வாங்கி சாப்பிடுவார். ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி ஒருவர் இறந்துவிட்டார். அருகில் இருந்த அனைவரும் துக்கத்துக்கு சென்று வந்தனர். ஆனால் காம்பிளான் பாட்டி மட்டும் செல்லவில்லை. பக்கத்து வீட்டு ஆண்டி என் அம்மா எதிர் வீட்டு அண்டி அனைவரும் பேசிக் கொண்டனர் கூடபிறந்த தங்கையை இறந்த பிறகாவது பார்க்க கூடாதா? என்று. கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது….
பாட்டியின் மனது மீட்டப்படாத இராகம்
ReplyDelete