
எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் என்னுடைய அப்பா டி.பி.சானிடோரியம் என்ற செங்கிப்பட்டியில் அஞ்சல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். சிறிய ஊர் என்பதால் போஸ்ட் மாஸ்டர் வீட்டு பெண் என்று ஒரு நல்ல போர் இருந்தது எனக்கு. அந்த ஊரில் இருந்த ஒருவர் வீட்டில் பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது எனக்கு நெல்லிக்காய் சாப்பிட ஆசை வந்து அவர்கள் வீட்டற்க்குப்போய் எங்க அப்பா நெல்லிக்காய் கேட்டார் என்று சொன்னேன் அவ்வளவு தான். அவர்கள் வீட்டில் என்னை உள்ளே அழைத்து ஒரு பெரிய மரக்காவில்(நாலு படி ஒரு மரக்கா இளைய சமுகத்திற்காக) ஒரு மரக்கா கொடுத்தார்கள். ஒரு சிறிய கிராமத்தில் மிக சாதாரண வுpட்டில் பை எங்கு இருக்கும்(1973-74ல்) என் பாவாடையில் அப்படியே வாங்கி கொண்டேன். 10 அல்லது 15 அடி பள்ளத்தில் நடந்து ரோடுக்கு மேலே வரவேண்டும். சற்று வந்த உடன் ஆசை போய் பயம் வந்து விட்டது. என்னால் எப்படி இவ்வளவு நெல்லிக்காயை சாப்பிட முடியும் என்ற பயம் வந்துது. நான் இவர்கள் வீட்டிற்க்கு திரும்பி சென்று எங்கப்பா மருந்துக்காகதான் கேட்டாங்க அதனால கொஞ்சமா போதும் என்று சொல்லி அவர்களிடம் திருப்பி கொடுத்து விட்டு 10 நெல்லிக்காய் மட்டும் பெற்று கொண்டேன். எனக்கு நெல்லிக்காய் எவ்வளவு சாப்பிட படிக்குமோ அந்த அளவிற்க்கு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க பிடிக்கும். இப்பொழுது வாயில் ஏற்படும் இனிப்பு சுவைக்கு ஈடு வேறு சுவை கிடையாது. ஆனால் என்னால் இந்த திருட்டு நெல்லிக்காயால் எந்த சுவையையும் அனுபவிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஓருசேர என்னால் அந்த 10 நெல்லிக்காவையும் சாப்பிட முடியவில்லை. எப்படியோ நான் செய்யத தவறு (சிறுபிள்ளை தனம்) முடிந்து வீட்டுக்க வந்து விட்டேன். மறுநாள் அப்பா அலுவலகத்தில் போஸ்ட. மாஸ்டர் என்பதால் கவுண்டரில் அமர்ந்து இருந்தபோது அலுவலகத்துக்கு வந்த அந்த நெல்லிக்காய் ஆசாமி சும்மா இல்லாமல் சார் வீட்டில் யாருக்கு உடம்பு சுகம் இல்ல பாப்பா நேற்று எங்க வீட்டுக்கு வந்து மருந்துக்கு நெல்லிக்காய் வேண்டும் என்று கேட்டு வாங்கி போனார்களே என்றார். அவ்வளவு தான் நான் வீட்டில் இருந்து ESCAPE. எவ்வளவு நேரம் வீட்டிற்க்கு வராமல் இருக்க முடியும். மெதுவாக வந்து சத்தம் இல்லாமல் அமர்ந்து விட்டேன். ஏனோ அப்பா அவர் அலுவலக வேலை காரணமாக மறந்து விட்டார்.
Arumayana padhivu.
ReplyDeleteஅருமையான பதிவு. ஆஹா பேஷ் பேஷ்
ReplyDeleteநெல்லிக்காய் நெஞ்சில் நின்றக்காய்
ReplyDeleteNot showing your latest posting done today ..on playing Matha
ReplyDeleteMadam
ReplyDeleteபுதியன போடுங்கள்
பழைய நெல்லி ஊறுகாய் சட்டியை ஒரு வருடம் பிறகு கிளறினால் எப்படி ..