சந்ரா டீச்சர்
திருக்காட்டுப்பள்ளி சர்.சிவசாமிஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். டீச்சரும் நானும்; பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஓரே தெருவில் வசித்து வந்தோம். ஆனால் டீச்சர் எனக்கு வகுப்பு எடுக்க வில்லை.டீச்சரின் மகளும் நானும் நல்ல தோழிகள். எனக்கு பள்ளி விடுமுறை என்றால் நான் டீச்சர் வீட்டுக்கு குடிபெயர்ந்து விடுவேன். என் தோழி மிகவும் நன்றாக பாடுவாள். கேட்டு நன்கு ரசிப்பேன்.டீச்சரும் அவருடைய கணவர் இருவருமே பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டியில்; தான் தினமும் பள்ளிக்கு பயணிப்பார்கள். சில நேரங்களில் மாலையில் நான் வீடு திரும்பும்போது என்னை பார்த்தால் வண்டியில் ஏற்றிக்கொள்வர். மழைக்காக பள்ளி விடுமுறை என்றால் பியூன் சைக்களில் வந்து தெரிவித்து விட்டு சுற்றறிக்கையில் கையெழுத்து வாங்கி போவார். அந்த பகுதி மாணவர்கள் ஆசிரிய தம்பதி மூலமே விடுமுறையை அறிவர். நான் மிக அருகில் இருந்ததாலும் அவர்களின் நட்பாலும் எனக்கு உடனே செய்தி தெரிவதை மிகவும் பெருமையாக நினைப்பேன். ஒருநாள் மாலை டீச்சர் வீட்டுக்கு சென்ற போது சலவை செய்து வந்த துணியை தரையில் வைத்திருந்தனர். டீச்சர் வீட்டில் ஊஞ்சல் இருந்தாலும் நான் எப்பொழுதும் தரையிதான் உட்காருவேன்(மரியாதை) சலவை துணியருகில்; ஒரு இங் பாட்டில் இருந்ததை நான் கவனிக்காமல் பாட்டிலை தட்டிவிட்டுவிட்டேன். சலவை துணி அனைத்தும்; இங்ஆல் நனைந்து விட்டது. ஒரு நொடிப்பொழுதில் எனக்கு நல்ல நட்பை இழுந்துவிடுவேனோ என்ற பயம் கவனக்குறைவால் உண்டான சங்கடம் இதை எப்படி வெளிபடுத்துவது என்ற தயக்கம். இதன் இடையில் “ கவலை படாத சுந்தரி “மீண்டும் தோய்துக்கொண்டால் போகிறது என்று டீச்சரின் குரல் வந்த திசையை நோக்கி தயக்கம் பயம் இல்லாமல் மிக அன்புடன் சாரி டீச்சர் என்றேன். இன்றளவும் இந்த பெயரை கேட்டாலே டீச்சரின் தாயுள்ளம்தான் நினைவுக்கு வரும்.
Sweet hearted teacher and nice article
ReplyDeleteYes
Deleteமனதில் பதிந்தவை....அருமை...
ReplyDeleteநன்றி.
Delete