தோழி பாத்திமா
புனித கபிரியேல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் என்னுடைய சக மாணவி பாத்திமா. காலாண்டிற்க்கு பிறகு தான் என்னுடைய தோழியாகிறாள். என்வகுப்பில் அனைவருமே பாத்திமாவை அக்கா என்று தான் அழைப்பார்கள். காரணம் பாத்திமாவின் படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். அவருடைய தங்கை பூப்பெய்திய பிறகும் படிப்பை தொடர்ந்தார். உடனே பாத்திமா நானும் என்னுடைய படிப்பை தொடர்கிறேன் என்று சொல்லி மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளை விட மூன்று ஆண்டுகள் வயதில் பெரியவர் என்பதால் அவைரும் அவரை அக்கா என்று அழைத்தனர் என்பதை நான் பிறகு அறிந்துக்கொண்டேன்.(அப்பாவின் பணிமாற்றம் காரணமாக அந்த ஆண்டுதான் அந்த பள்ளியில் சேர்ந்தேன்) மிகவும் எளிமையா அமைதியான அன்பான பாத்திமா அனைவரிடமும் சகோதரியாகவே பழகினாள.; நான் மட்டும் பெயர் சொல்லி ஒருமையில் அழைக்க ஆரம்பித்தேன். வகுப்பில் மற்ற மாணவிகள் எனக்கு மரியாதை தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் நான் இப்படி அழைப்பது என்னுடன் நெருக்கத்தையும் ஒரு விருப்பத்தையும்; பாத்திமாவுக்கு உண்டு செய்ததை உணர்ந்தேன். இந்த ஒரு சிறிய மாறுபட்ட செயல் எனக்கு ஒரு சிறந்த தோழியையும் ஒரு நல்ல வாழ்க்கை அனுபவத்தையும் ஏற்படுத்திதந்தது. இந் நிலையில் ஆங்கிலத்தில் ஒரு ஒப்பிவித்தல் போட்டியை பள்ளி அறிவித்தது. அதில் கலந்து கொள்ளும் என்னுடைய ஆர்வத்தை நான் பாத்திமாவிடம் தெரிவித்தேன். ஏன்என்றால் நான் படித்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற கூட தகுதி இல்லாதவள் என்பது என் பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளின் எண்ணம். ஆனால் பாத்திமா கவிக்குயில் சரோஐpனி நாயுடுவின் "How beautiful is the Rain" என்ற ஆங்கில கவிதையை நல்ல உச்சரிப்பு மற்றும் செய்கையுடன் சொல்லிக் கொடுத்ததில் நான் முதல் பரிசும் பெற்றறேன். பாத்திமாவே, நான் பள்ளி மற்றும் கல்லூயில் சிறந்த பேச்சாளராகவும், விசுவின் மக்கள் அரங்கத்தில் இரண்டுமுறை பேசும்வாய்ப்பும.;; இன்றளவில் பல பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது நிகழச்சிகளில் நான் பேசி கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு அடித்தளமாக இருந்தார்.
Excellent. Eager to read the rest.
ReplyDeleteவாழ்த்துகள் ம்மா..அடி மனதில் பதிந்தவை...மறக்கவே முடியாது...
ReplyDeleteதிரும்ப திரும்ப அதே ஆறிய கஞ்சி .. என்னமோ .. சுவை கூடியே இருக்கு
ReplyDeleteஆனா மறுபடி போடாதீங்கோ அம்மா
Superb.
ReplyDelete