ஸ்கூல் பாக்ஸ்
1970 களில் பள்ளிக்கு அலுமினியபெட்டி கொண்டு வருவது என்பது மிகவும் பெருமைக்குரிய செயலாக இருந்தது. இப்பொழுது முதுகில் மாட்டிக்கொள்ளும் பை வழக்கத்தில் உள்ளது போன்று அப்பொழுது சற்று வசதியானவர்கள் இந்த அலுமினிய பெட்டியை குழந்தைகளுக்கு வாங்கி தருவார்கள். பெட்டி மிக அழகாக இருக்கும். மூடியின் உள் பகுதியில் ஒரு பௌச் இருக்கும் பேனா பென்சில் வைத்துக்கொள்ள. எனக்கு எப்படியோ அந்த பெட்டியின் மீது ஆசை வந்து விட்டது. தீராத காதல் என்று கூட சொல்லலாம். அப்பாவிடம் கேட்டு பயன் இல்லாமல் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்பா வீட்டில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் எப்படியாவது பேசி கடைசியில் அந்த பெட்டியில் முடிப்பேன். அவர் எனக்கு தந்தையல்லவா? சளைக்காமல் சாக்கு போக்கு சொல்லி மிக அருமையாக என்னை சமாளிப்பார். ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது எனக்கு. என்னடைய பெரியப்பாவின் பெண் கல்யாணம் மதுரையில் ஊருக்செல்லும் நேரத்தில் நான் என்அப்பாவின் அருகில் அமர்ந்து பயணித்தேன். சதா பெட்டி புராணம் தான். பெரியப்பா அவர் பெண் கல்யாணத்திற்க்கு ஆடை வாங்கி கொள்ள பணம் கொடுத்தார். அவ்வளவுதான். அப்பா என்னிடம் வகையாக மாட்டிக்கொண்டார். வேறு வழியில்லாமல் நிர்பந்தத்தின் அடிப்படையில் வாங்கி கொடுத்துவிட்டார். இன்றளவும் என்னுடைய அப்பா அந்த பெட்டியை பயன் படுத்தி வருகிறார். இந்த அளவுக்கு தரமான பொருட்கள் இப்பொழுது கிடைக்குமா? அல்லது இப்பொழுது நம்மால் இவ்வளவு காலம் ஓரே பொருளை பயன்படுத்ததான் முடியுமா?
மிகவும் அழகாக எழுதப்பட்ட நினைவுக் குறிப்பு,அடுத்த பதிவிற்காக காத்து உள்ளேன்!
ReplyDeleteநன்றி தொடர்ந்து படிக்கவும்.
DeleteSuper மாமி
Delete