Resort (ஓய்வுபொழுதுபோக்கு இடம்.)

 Resort  (ஓய்வு பொழுதுபோக்கு இடம்.) (16.11.23).



இயற்கையாக நல்ல எழிலுடன் அமைந்த இடத்தை அடிப்படையாக கொண்டு, செயற்கையாக நல்ல அழகான இடங்களை பல ஏக்கர் நிலபரப்பில் உருவாக்கும் சிறந்த வியாபார தலம் தான் ரிசார்ட்.








என்னுடைய பேத்தியின் பிறந்தநாளை கொண்டாட நாங்கள் குடும்பத்துடன் "Marutham Village Resort" சென்றிருந்தோம். எனக்கு கிடைத்த இந்த பொழுது போக்கு (வாய்ப்பை) இனிமையான அனுபவத்தை பகிர்கிறேன்.






நேரக்கணக்கு, நாள் கணக்கு, இங்கு நாம் பயன்படுத்தும் கேளிக்கைகளை அடிப்படையாக கொண்டு பணம் வசூலிக்கப்படுகிறது.

தனியாராக, உள்ளதால், நல்ல அழகூட்டப்பட்டு,  மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. நாங்கள் சென்றது கிராமத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட  இடம். இதன்காரணமாக, கிராமிய வீடுகள், கரகாட்டம், பொய்கால் குதிரை, கிராமிய குளம் (நீச்சல்குளம்) போன்று வடிவமைத்திருந்தனர். குறிப்பாக கோவில் குளம் போன்று இருந்தது.  பம்ப் செட், வயல்வெளி, மாட்டுவண்டி பயணம் என்று இருந்தது. 20 ஆண்டுகள் நான் கிராமத்தில் வாழ்ந்ததால் இவை எனக்கு எதுவும் புதிதல்ல, இருந்தாலும், பயம் (நான் வாழ்ந்தகாலத்தில் பெண்பிள்ளை தனியாக சென்று ஊரை சுற்றமுடியாது)  இல்லாமல் (கடமை அடைப்படை ) சுமை இல்லாமல் நான் நன்றாக இந்த சிறிய கிராமத்தை வலம்வந்தேன். 










































No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...