இயற்கையாக நல்ல எழிலுடன் அமைந்த இடத்தை அடிப்படையாக கொண்டு, செயற்கையாக நல்ல அழகான இடங்களை பல ஏக்கர் நிலபரப்பில் உருவாக்கும் சிறந்த வியாபார தலம் தான் ரிசார்ட்.
என்னுடைய பேத்தியின் பிறந்தநாளை கொண்டாட நாங்கள் குடும்பத்துடன் "Marutham Village Resort" சென்றிருந்தோம். எனக்கு கிடைத்த இந்த பொழுது போக்கு (வாய்ப்பை) இனிமையான அனுபவத்தை பகிர்கிறேன்.
நேரக்கணக்கு, நாள் கணக்கு, இங்கு நாம் பயன்படுத்தும் கேளிக்கைகளை அடிப்படையாக கொண்டு பணம் வசூலிக்கப்படுகிறது.
தனியாராக, உள்ளதால், நல்ல அழகூட்டப்பட்டு, மிக சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. நாங்கள் சென்றது கிராமத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இடம். இதன்காரணமாக, கிராமிய வீடுகள், கரகாட்டம், பொய்கால் குதிரை, கிராமிய குளம் (நீச்சல்குளம்) போன்று வடிவமைத்திருந்தனர். குறிப்பாக கோவில் குளம் போன்று இருந்தது. பம்ப் செட், வயல்வெளி, மாட்டுவண்டி பயணம் என்று இருந்தது. 20 ஆண்டுகள் நான் கிராமத்தில் வாழ்ந்ததால் இவை எனக்கு எதுவும் புதிதல்ல, இருந்தாலும், பயம் (நான் வாழ்ந்தகாலத்தில் பெண்பிள்ளை தனியாக சென்று ஊரை சுற்றமுடியாது) இல்லாமல் (கடமை அடைப்படை ) சுமை இல்லாமல் நான் நன்றாக இந்த சிறிய கிராமத்தை வலம்வந்தேன்.
சென்னை எழும்பூரில் (Egmore) 66.000 சதுரமீட்டர் (16.25) ஏக்கர் நிலபரப்பளவில், இயங்குகிறது. 1846 ஆம் ஆண்டு (Madras Literary Society) சென்னை கல்வியியல் சங்கம் சென்னைக்கு, அருங்காட்சியகம் வேண்டி சென்னை மாகாண ஆளுநரிடம் பரிந்துரைத்தது. அன்றைய சென்னை ஆளுனர் ஹென்றி, பாட்டிங்கர் (Henry Pottigner) இலண்டன் கிழக்கிந்திய கம்பெனி நெறியாள்கள் குழுவிடம் அனுமதி பெற்றார். 1851 ஏப்ரல் 29 அன்று புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரி முதல் தளத்தில் துவக்கிவைக்கப்பட்டது. 1854–ல், கட்டிடம் உருவாக்கப்பட்டு Pantheon சாலைக்கு, மாற்றப்பட்டது.
15ரூபாய் நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.
அருங்காட்சியகம் 6 பிரிவுகளாக, பிரிக்கப்பட்டு, தனித்தனி கட்டிடங்களில் அமைக்கப்படுள்ளது. பிரிவு ஐந்து மட்டும் புனரமைப்பு செய்யபடுவதாக பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது, ஆனால் முழுகட்டிடமும் அதற்கான தேவைக்குஉட்பட்டிருந்தது.
1. தொல்லியல் துறை.
நாம் வாங்கும் நுழைவு சீட்டில் 6 பிரிவுகளை குறிக்கும் வண்ணம், ஒன்று முதல் ஆறு எண்கள் பதிவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவின் நுழைவின் போதும், அவை துளையிடப்படுகிறது.
இதில் கருங்கல் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரசர்கள் காலம், மதம் என்று பல பகுதியாக, பிக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது. பறவைகள். விலங்குகள், ஊர்வன, நீர் விலங்குகள் என்று பல பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தையே பெரும்பாலான மக்கள் பார்வையிடுகின்றனர்.
2. மானுடவியல்.
இதில், மனிதர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார உடைகள் , அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், என்பவை போன்ற பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
3. நாணயவியல்.
இந்த பிரிவை நான் தேடிசசென்று, பார்த்தேன். இங்கு நான்கு பணியாளர்கள் இருந்தனர் ஒரு பார்வையாளர்கள்கூட இல்லை. நம்நாடு, மற்றும், பிற நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. நான் மட்டுமே பார்வையாளர்.
4. சிறுவர் காட்சியகம்.
சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள், அடிப்படை அறிவியல், புவியில், விண்வெளி போன்ற பல துறை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
5. பராமரிப்புபணி நடைபெருகிறது.
6. வளர்கலைகூடம்.
உருவப்படங்கள், ரவிவர்மா ஓவியங்கள், சமகால ஓவியங்கள் பாவையிடப்பட்டிருந்தன.
கன்னமாரா நூலகம். (Connemara Library)
1853-ல் துவங்கப்பட்டு, 1896- டிசமபர்5ஆம் தேதி புதியகட்டிடத்தில் “கன்னமாரா நூலகம் என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா கண்காட்சி என்று ஒரு பகுதி அமைத்திருந்தனர்.
அரிதான பொருட்கள்கள் காட்சி என்பதாலேயே அருங்காட்சியகம் என்றானது. தொல்லியல் துறை மட்டுமே சற்று சிறப்பாக உள்ளது. (இயங்குகிறது) பார்வையாளர்களும் மற்ற துறைகளை தவிர்த்துவிடுகின்றனர், அதன் நிலை கருதி.