கோடகநல்லூர். (நவகைலாயம்-மூன்றாவது தலம்).தரிசனநாள்-5.6.2022.
உரோசம மகரிஷி 9 பூக்களை தாமிரபரணியாற்றில் மிதக்கவிட்டு அவை ஒதுங்கிய கரைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களே நவகைலாயம் எனப்போற்றப்படும் கோவில்களாகும்.
இருப்பிடம்.
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி-சேரன்மகாதேவி- நெடுஞ்சாலையில் இருந்து, 15கி.மீ. தொலைவில் உள்ளது.
கோவில் தனித்துவம்.
சிவகாமி அம்மன் சமேத கைலாசநாதர் ஆலையம், 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கோவிலில் கொடிமரம், கோபுரம் கிடையாது. செவ்வாய்தலம் என்பதால், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நந்திக்கு ,மஞ்சளை ,கயிற்றில் கட்டி போடுவது வழக்கமாக உள்ளது.
கோடகநல்லூர் பெயர் காரணம்.
ஒரு முனிவர், தியானம் செய்து கொண்டிருக்கும் போது, பரிஷித்து மகராஜனின் மகன் ஜெயமே ஜெயன், முனிவரிடம் ஏதோ கேட்க, அவர் தியானத்தில் இருந்ததால் பதில் அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஜெயமே ஜெயன் இறந்த ஒரு பாம்பின் உடலை முனிவரின் கழுத்தில் அனிவித்துவிட்டு சென்றான். இதை கண்ட முனிவரின் மகன் இந்த செயலை செய்தவனின் தந்தை, பாம்பு கடித்து இறக்க வேண்டும். என்று சாபம் விடுகிறான். பரிஷித் மகாராஜா எவ்வளவோ தற்காத்து கொண்டும், கார்கோடகன் என்ற பாம்பு கடித்து இறந்து விடுகிறான். ஓர் உயிர் பிரிய காரணமாக இருந்த பாவத்தை போக்க திருமாலை வேண்டுகிறது, கார்கோடகன் பாம்பு. திருமாள் இந்த கைலாயநாதரை வணங்க பாப விமோசனம் கிடைக்கும் என்றார். கார்கோடகன் சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால், கோடகநல்லுர் என்ற பெயர் பெற்றது.