ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் செம்மஞ்சேரி. (தரிசனநாள்-3.5.2022).
கி.பி.15ஆம் நூற்றாண்டிற்க்கும் 16 ஆம் நூற்றாண்டிற்க்கும் இடைப்பட்ட இந்த கோவில் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள செம்மஞ்சேரி என்ற இடத்தில் உள்ளது. பல்லவர்களால் கட்டப்பட்டு பின்னர் நாயக்க மன்னர்களால் புதுபிக்கப்பட்டது. நரசிம்ம வர்ம பல்லவர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வறட்சியை இந்த பெருமாள் தீர்தார் என்ற செய்தியும் உள்ளது.
தல புராணம்.
விஷ்ணுவின் பக்தரான ஸெளனக மகரிஷி திருக்கடல் மல்லை (மகாபலிபுரம்) செல்லும் வழியில், அழகிய நீரோடைகளும், வயல்வெளிகளும் நிறைந்த செருமணஞ்சேரியில் நித்ய பூஜைகளை முடித்து பெருமாள் கோவிலுக்கு செல்ல நினைத்து , இந்த ஊர் மக்களிடம் கோவில் எங்கே என்று கேட்டதற்கு, இவ்வூரில் பெருமாள் கோவில் கிடையாது என்பதை அறிந்து, பெருமாள் நோக்கி தவம் இருந்தார். இறைவன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசனாக காட்சியளித்தார். ஸெளனக மகரிஷி மகாவிஷ்ணுவிடம், இந்த செருமணஞ்சேரியில் இருந்து மக்களை காக்குமாறு வேண்டினார்.
கோவில் பராமரிப்பு.
2007 ஆம் ஆண்டு வரை முற்றிலும் சிதிலம் அடைந்த நிலையில் இருந்த இந்த கோவில், ஸ்ரீஅலமேலுமங்கா சமேத, ஸ்ரீஸ்ரீநிவாசன் பெருமாள் டிரஸ்ட் திருவல்லிக்கேணி, செம்மஞ்சேரி மக்களுடன் இணைந்தும், தமிழக அரசின் அறநிலைதுறையின் அனுமதியுடனும், இக் கோவில் புதுபிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2009 ல் ராஜகோபுரம் அமைத்த பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.