பொன்விளைந்த களத்தூர்.



 செங்கல்பட்டு நகருக்குள், நீதிமன்ற வளாக அருகில்,  பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர்பலகையை காணலாம். அங்கிருந்து ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தை கடந்து சென்றால்,  பொன்விளைந்த களத்தூர் என்ற கிராமத்தை அடையலாம். இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் மற்றும் நரசிம்மர், கோதண்டராமர், கோயில்களைப்பற்றியும், இந்த ஊர் பெயர்காரணத்திற்கான செய்திகளையும், அறிந்துக்கொள்வோம். 


அருள்மிகு மீனாட்சி உடனுறை முன்குடுமீஸ்வரர் ஆலையம்.

கி.பி. 750 ஆம் ஆண்டு பல்லவ மன்னரால்; கட்டப்பட்ட கோவில். 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் வணங்கிய இறைவன், புகழேந்தி புலவர், வீரராகவ முதலியார், படிகாசு புலவர் பிறந்த இடம் என்று பல பெருமைகளை கொண்டது, பொன்விளைந்த களத்தூர். 

    பல்லாண்டு காலமாக கோவிலில் இறைவனுக்கு சார்த்திய மாலையை மன்னரிடம்  சேர்த்து வந்தனர். அர்ச்சகரின் மனைவிக்கு அந்த மாலையை அணிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை மேலிட அதை அணிந்து அழகு பார்த்த நேரத்தில் அரண்மனையில் இருந்து மாலையை பெற சேவகர் வந்த உடன், உடனே களைந்து கொடுத்த அவசரத்தில் அதில் அர்ச்சகரின் மனைவியின் கூந்தல் முடி இருப்பதை கவனியாமல் கொடுத்து விடுகிறார். அரசன் கோபத்தில் முடிக்காண காரணத்தை வினவ, அர்ச்சகர் லிங்கத்தின் முன் குடுமியில் உள்ள முடி என்று பதிலளிக்கிறார். அரசன் இறைவனின் முடியை காண்பதற்கு விழைகிறார். அர்ச்சகரின் பக்திக்கு இறைவன் செவிசாய்த்து,  அரசன் தரிசிக்க வரும் தருணத்தில் முன் குடுமி  முடியுன் காட்சியளிக்கிறார். சுந்தரேசன் என்ற பெயரில் அருள்பாலித்த இறைவன்,  அன்றய தினம்  முதல் முன்குடிமீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீலெட்சுமி நரசிம்மர் கோவில்.

இறைவன் வைகுண்டவாசபெருமாள் தாயார் அஹோபில வல்லி தாயார். உற்சவர் லெஷ்மி நரசிம்மர்.  இந்த நரசிம்மர்,  மாமல்லபுரத்தில் (திருகடல்மலை) இருந்து கடல் பெருக்கு காரணமாக இந்த கிராமத்திற்கு கருடர் வாழிகாட்டுதலுடன் கொண்டுவரப்பட்டார், என்று புராணம் கூறுகிறது.






கோதண்டராமர் கோவில்.

இந்த கோவிலில் திருபுல்லாணி ராமருக்கு தனி சன்னதி உள்ளது. (தர்பை மேல் சயனித்த கோலம்) ராமேஸ்வரம் போன்றே அமைந்துள்ளது.

பெயர்  காரணம்.

அதிக பெண்குழந்தைகளை உடைய அர்ச்சகருக்கு அரசன் கொடுத்த நிலத்தில் நெல் மணிகள் இறைவன் அருளால் பொன்னாக விளைந்ததால் பொன்விளைந்த களத்தூர் என்று சைவமும், வேதாந்த தேசிகர் மேற்கொண்ட யாத்திரையில் தோன்றிய வெள்ளை நிற குதிரை, வாய்பட்ட இடங்களில் நெல் கதிர்கள் பொன்னாக மாறியதாக வைணவமும் கூறுகிறது. செழிப்பாக  விளையும் பூமியை பொன்விளையும் பூமி என்றும் வழக்கில் நாம் கூறுவதுண்டு.


4 comments:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...