50ரூ நோட்டின் பின் பகுதியில் இந்த கல் ரதம் அச்சிட்டிருக்கும்.
மந்ராலயம்
கடந்த மார்ச் 24 ஆம் தேதி நானும் என்கணவரும் பெங்களுரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு அன்று இரவே புகைவண்டியில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள மந்ராலயம் கிளம்பினோம். 25ஆம் தேதி வியாழக்கிழமை குரு வழிபாடு சிறந்தது. எங்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறிய மன நிறைவுடன், அதிகாலை மந்திராலயம் ரோடு ரயில் நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து பேருந்து, பகிர்ந்து செல்லும் ஆட்டோ, வாடகை கார் என்று பல –வசதிகள் உள்ளன மந்ராலயம் செல்ல.. ரயில் நிலையத்தில் இருந்து 10K.M. தொலைவில் உள்ளது. நாங்கள் மடத்திலேயே தங்குவதற்கு அறை முன்பதிவு செய்திருந்தோம். மடத்தின் தங்கும் இடம் பிருந்தாவனத்திலேயே அமைந்துள்ளது. நான் 1978 ல் முதன்முதலில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிருந்தாவனத்திற்கு சென்று குரு ராகவேந்திரர் என்பவரை பற்றி அறிந்துக்கொண்டேன். 1985-ல் ரஜினிகாந் நடித்த “குரு ராகவேந்திரர் என்ற திரைபடத்தின் மூலமே தமிழக மக்கள் இந்த மகானைப்பற்றி நன்கு அறிந்தனர். இவர் பிறந்த ஊரான புவனகிரி தமிழ்நாட்டில், சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் மடத்திற்கு சென்று பலரும் வழி படுகின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மகான், பக்த பிரகலாதனின்; அவதாரம், என்றும். தவத்தின் பயனாக ராம பக்த ஹனுமனை நேரில் தரிசித்தவர் என்று கூறப்படுகிறது. இவரின் ஜீவ சமாதியே மந்ராலயம். கோவிலில் அதிகம் கூட்டம் இல்லை. நோய் தொற்று காரணமாக கூட இருக்கலாம். நம்வீட்டிற்கு மிக அருகில் உள்ள சிறிய கோவிலை வணங்குவது போன்று மிக அமைதியாக, நிம்மதியாக தரிசனம் செய்தோம். மதியம் 3மணிக்கு ஹொசபேட் என்ற இடத்திற்கு பேருந்தில் பயணித்தோம். ஹம்பி செல்வதற்காக.

ஹம்பி
நாம் வரலாற்றில் படித்த விஜயநகர பேரரசே தற்காலத்தில் ஹம்பி என்று அழைக்கப்படுகிறது. இன்றைய நம் இந்தியாவின்,கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா, தமிழ்நாடு,கேரளா மாநிலத்தின் பெரும் பகுதியே விஜயநகர பேரரசு என்று அழைக்கப்பட்டது. கிருஷ்ணதேவராயரே மிகவும் புகழ் பெற்ற அரசராக விளங்கினார். விஜயநகரத்தை தலைநகரமாக கொண்டமையால், இதன் பேரிலேயே விஜயநகர பேரரசு என்று அழைக்கப்பட்டது. இது தற்பொமுது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹம்பி என்ற ஊரை மையமாக கொண்டே அமைந்துள்ளது.
பெல்லாரி மாவட்டமாக இருந்த இந்த இடம், தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் 31 வது புதிய மாவட்டமாக விஜயநகரம் என்று அறிவிக்கப்பட்டது. (பிப்ரவரி2021) இந்த ஹம்பியை பார்பதற்க்கு குறைந்தது 5 நாட்கள் வேண்டும். அனைத்தும் கோவிலாக இருந்தாலும், தொல்பொருள் மற்றும் கட்டிடக்கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே கண்டு களிப்புற முடியும். நாங்கள் பார்த்த வெகு சில இடங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

1. விருபாக்ஷா கோவில் - சிவன் கோவில்
2.உக்ர நரசிம்மர் -
3. படவலிங்கா (இரண்டும் அருகருகே உள்ளது.
4. ஹசாரா ராமர் கோவில் (ராமர் .இலக்குவர். சீதை) மிக அற்புதமாக இருந்தனர். துங்கபத்ரா நதிக்கரைநதிக்கரையில் அமைந்திருந்தது, இக்கோவில். அக்கரையில் , அஞ்சநாத்ரி என்ற ஆஞ்சநேயர் கோவில் இருந்தது.
அஞ்சநாத்ரி ஆஞ்சநேயர் கோவில்
நாம் பரிசில் மூலமாகவும் செல்லலாம். ஆனால் நாங்கள் சாலைவழியாகவே இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றோம். ஆஞ்சநேயரை பார்க படி ஏறி செல்லும் போது அந்த இடம் சோளிங்கர் கோவிலை நினைவு படுத்தியது.
5. விட்டலா என்ற பெருமாள் கோவில் ,
6. கல்லினால் செய்யப்பட்ட ரதம்.
இது நமது 50ரூ நோட்டின் பின் பகுதியில் இந்த கல் ரதம் அச்சிட்டிருக்கும்.
7. Queens Bath
இவைகளை பார்பதற்கே எங்களுக்கு 9மணிநேரம் தேவைபட்டது. இடையில் மதிய உணவிற்காக அரை மணி நேரம் செலவிட்டிருப்போம். மறுநாள் ஹொசபெட்டில் இருந்து Hubballi வந்து, Hubballiயில் இருந்து பாண்டிச்சேரிக்கு புகைவண்டியில் திரும்பினோம்.
Best wishes keep writing madam
ReplyDeleteGud madame
ReplyDelete🙏🙏🙏
ReplyDelete