பொக்கிஷம்


 என்னுடைய  அப்பா அஞ்சல் நிலைய அதிகாரியாக பணிபுரிந்தமையால் நான் பல ஊர்களில் வசித்துள்ளளேன். அதனால் எனக்கு பல நெருங்கிய தோழிகள் உள்ளனர்;. நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது என்னுடன் தினமும் பஸ்சில் பயணிக்கும் நட்புவட்டத்தில் என் உயிர் தோழியானாள் அனுசியா. என்னுடைய சிறப்பு பாடம் பொருளாதாரம்  அவள் புவியியல் மாணவி(Geography). எனக்கு முதலாம் ஆண்டின் துணைப்பாடம் புவியியல் இதன் காரணமாகவும் எங்களுடைய நட்பு பலபட்டிருக்கலாம். நான் வாய் ஓயாமல் பேசிக்கொணடே இருப்பேன்; அவள் அதிகபட்சமாக புன்னகைப்பாள். இப்படியே மிக சாதாரணமாக போய்கொண்டிருந்தது எங்களடைய நட்பு. ஒரு நிகழ்ச்சிக்கு என்னுடைய பெற்றோர்கள் கட்டாயமாக செல்ல வேண்டிய நிர்பந்தம் எற்பட்டது. அதிகாலை நேரத்தில் என்னை தனியாக விட்டு செல்ல விருப்பபடாத நிலையில் நான் என்னுடை தோழி அனுசியாவீட்டிற்க்கு செல்லும் யோசனை  என் பெற்றோர்களால் ஏற்கப்பட்டு நான் அங்கு சென்றேன். காலை 5 மணி அப்பொழுது 8.35க்கு நாங்கள் செல்லும் பேருந்து வரும்.  அதுவரை அவர்கள் வீட்டில் நான் அனைவருடனும் பேசிகொண்டிருந்தேன். அனுசியா வீட்டில், அம்மா, அப்பா, இரண்டு அண்ணன், அண்ணிகள் , அவர்களுடைய குழந்தைகள்,  இரண்டாவது அண்ணன் நடத்தும் Cool Drinks Factory  (மிக சிறியது அவரே அனைத்தும்) ஆடு, மாடு ,தோட்டம், என்று எல்லா இடங்களும் பார்த்தேன். நாங்கள் கிளம்பிய போது குடும்பமே வாசலுக்கு வந்து வழியனுப்பினர். நாங்கள் பஸ்சில் பயணித்து கல்லூரிக்கு சென்று அவரவர் வகுப்புக்கு சென்றோம். இரண்டாவது மணியில் தான் (Second Hour) எனக்கு நன்கு பசித்தது. அப்பொழுதுதான் நான் காலை உணவருந்தாதது நினைவுக்கு வந்தது. என்னுடைய அம்மா இட்லியை காலை உணவாகவும் சாதம் மதிய உணவாகவும் இரண்டு டப்பாவில் போட்டுக்கொடுத்திருந்தார். அப்பொழுதுதான் அனுசியாவும் உணவு உட்கொள்ளவில்லை என்ற நினைவு வந்தது. உணவு  இடைவேளையில் அவள் துறைக்கு(Dept..)  சென்று நாங்கள் இருவரும் அந்த உணவை பகிர்ந்துண்டோம். நான் அவர்கள் வீட்டில் உணவு உட்கொள்ள மாட்டேன் என்று அவளே நினைத்துக்கொண்டு எனக்காக அவளும் காலை உணவை தவிர்தது எனது மனதை தொட்டது.   இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை செய்த போது   என்னை பார்க்கவந்தது, டவுன்பஸ்சில் பயணிக்கும் போது ,கூட்ட நெரிசலில் நான் கைவலி மிகுதிகாரணமாக (இதுவே அறுவைசிகிச்சை காரணம்)  துன்பபட்டபோது, என்னுடைய புத்தகங்களையும் சேர்த்து சுமந்தது. என்று பல வழிகளில் அவளின் அன்பு வெளிப்பட்டது. நான் பட்ட மேற்படிப்பு படிப்பேன் என்றும் அவளுக்கு உடனே திருமணம் முடித்து விடுவார்கள் என்ற நிலையில் எனக்கு உடனே திருமணம் நடந்து விட்டது. அனுசியா கும்பகோணம் அரசு கல்லூரியில் அவளது முதுகலை படிப்பை தொடர்ந்தாள். நாங்கள் தஞ்சாவூர் அருகில் இருந்தாலும் என்னுடைய திருமணம் சென்னையில் நடந்தது. அனுசியா வரமுடியாத காரணத்தினால்  தஞ்சை ரயில் நிலையத்தில் என்னை சந்தித்து எனக்கு மரத்தில் செய்த ஒரு பெட்டியை(Playing Cards Box) நினைவு பரிசாக கொடுத்தாள். இன்றளவும் நான் இதை சிறந்த நட்பின் அடையாளமாக பொக்கிஷமாக (Treasure) காத்துவருகிறேன்.


6 comments:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...