தையலை கற்றாள் தையல்


பழைய தையல் மிஷின் விற்பனைக்கு என்று வாசலில் போட்ட விற்பனை பலகையை கழட்டினேன். ஏன் என்று கேட்ட கணவருக்கு பதில் சொல்ல எத்தனித்தபோது, இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அம்மா ஆடையை தைத்து கொடுத்தாலும் எனக்கு மனநிறைவே கிடைக்காது.  நீங்கள் தையல்காரர்  போன்று நன்றாகவே  தைக்கவில்லை. என்று எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பேன். என்னடைய திருமணத்ததிற்க்கு ரவிக்கை தைக்க தையல்காரரிடம் கொடுத்தேன். வரலாற்று நாவலில் வரும் நிலவறையில் இருந்தால் எப்படி மூச்சு முட்டுமோ அதுபோன்று இருந்தது. எத்தனை திருத்தம் செய்தும் ரவிக்கை தேறவில்லை. நல்ல காலம் “ஒரு பிளவுஸ் கொடு “ என்று  அம்மா சொன்ன அறிவுரையால் பிழைத்தேன்.  மீண்டும் அம்மாவே ஆஸ்தான தையல்காரராக மாறினார்.சென்னைவாசியாக மாறிய பிறகு எனது நாத்தனாரின் பரிந்துரையின பேரில் ஒருதையல்காரரிடம்; இடம் கொடுத்ததில் (printed silk saree attached blouse)  நாசம். கையையே ஏற்ற முடியவில்லை. திருத்தம் செய்ய வாய்பே இல்லாமல் தையல் பிரிக்க இடமே இல்லாமல் கத்தரித்து ஒவர்லாக் செய்து வைத்திருந்தார். அப்பொழுதான் நானே தைத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. அம்மா தைத்ததையும், வகுப்பு எடுத்ததையும் பார்த்துக்கொண்டே இருந்ததால் என்னால் நன்றாக தைக்க முடிந்தது.” காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு”  என்பார்களே அது போன்று எனக்கு தோன்றியது போலும். ஆனாலும்  நான் தைத்தது மன நிறைவை ஏற்படுத்தியது. என் நாத்தனார் அவர்வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வாங்கி கொடுத்த ஆடைக்கு நான் மட்டுமே ரவிக்கை  தைத்து போட்டுக்கொண்டு வந்தேன். மற்றனைவரும் மிக குறுகிய காலம் என்பதால் தையல்காரரிடம் கொடுத்து தைத்துக்கொள்ள முடியாமல் இருந்தனர். (பெருமையில் பூரித்து போனேன்)   தாய்மை காரணமாக மீண்டும் தையல்காரரை அணுக வேண்டிய நிலை. தீபாவளிக்கு வாங்கிய  இரண்டு ரவிக்கையை தொலைத்து சாதனை படைத்தார் தையல்காரர். பல மாதங்கள், அவருடன் சண்டைபிடித்து கடைக்குள் சென்று என்னுடைய பொருளை தேடி எடுத்துக்கொண்டேன். நல்ல காலம் அளவு பெரிதாக இருந்ததால் நானே சரி செய்து கொண்டேன்.  இரண்டாவது முறை தாய்மை அடைந்த பொழுது இரண்டு ஆண்டுகள். நான் புதிய ஆடையை நினைத்துக்கூட பார்க்க வில்லை. 18 ஆண்டுகள் சுயமாக தைத்துகொண்டிருந்த எனக்கு அவசரநிலை காரணமாக ஒரு பெண்மணியிடம் தைத்துக் கொண்டேன். சில காலம் அந்த பெண்மணியிடமே தைக்க ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் 6 ரவிக்கைகள் தைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, அனைத்தையும் உயரம் மிக குறைவாக தைத்து விட்டார். நான் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்க்கு மிகவும் கோபமாக பேசி துணி போதவில்லை என்று பொய் சொன்னது எனக்கு மிகவும் சினத்தை உண்டு செய்தது. ஒரு மீட்டர் துணியில் எத்தனை இஞ்ச் உயரம் வரை வைக்கலாம் என்று கூறி, எனக்கும் நன்றாக தைக்க தெரியும் என்று சொல்லி; திரும்பினேன். மீண்டும் சுயமாக தைக்க  ஆரம்பித்தேன். என் வீட்டிற்க்கு பக்கத்தில் ஒரு பெண்மணி வீடு கட்டி கொண்டு வந்தார். அவர் நான் தையலை தொழிலாக வைத்துள்ளேன். நான் தைத்து தருகிறேன் என்றார். 2வருடம் நன்றாக தைத்து கொடுத்திருப்பார்.  சமீபத்தில் துணி தைக்க கொடுத்து எட்டு  மாதங்கள்  முடிந்து விட்டது (டிசம்பர்) இதுவரை கொடுக்க வில்லை. இப்பொழுது நானும் வீட்டில்தான் இருக்கிறேன் (கொரோனா) நானே தைத்துக்கொள்கிறேன,; என்றாலும் திருப்பித்தராமல் நானே தைத்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி வீனாக நாட்களை கடத்திக்கொண்டே செல்கிறார். இப்பொழுது உங்களுக்கும் புரிந்து இருக்கும் நான் ஏன் விற்பனை  பலகையை அப்புறப்படுத்தினேன் என்று.





விற்பனை பலகையை கழட்டிய நான்,  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தையல் இயந்திரத்தை என்னுடைய தோழி ஒருவரிடம் விற்பனை செய்துவிட்டு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பல தேடுதலுக்கு பிறகு இந்த,  Brother Mechine வாங்கினேன். எனக்கும் என்னுடைய பேத்திக்கும் ஒரே மாதிரி துணி வாங்கி, ஆடைதைத்தேன். ஆடையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன். மீண்டும் என்னுடைய விருப்பத்தை தொடர்ந்தேன்.

வாட்ஸ்ஆப் செயலி ஒரு வரப்பிரசாதம்

வாட்ஸ்ஆப் செயலி ஒரு வரப்பிரசாதம்
        

 நானும் அனைவரை போன்று ஆன்டிராய்டு கைபேசி வாங்கி வாட்ஸ்ஆப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறேன். எனக்கு இது ஒன்றும் பெரிய செயலாக தெரியவில்லை. என்னடைய மகள் மூன்றாண்டுகளுக்கு முன்பு பயணக்கட்டுரை எழுதுவதற்காக செக் ரிபப்ளிக், ஸ்லோவேக்யா, ஹங்கேரி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றாள். தினமும்  என்னுடன் பேசுவாள். நான் மிக சாதரணமாக வீட்டில் உட்கார்ந்து பேசுவேன். அப்பொழுதுதான் 1970,80களில் வெளி நாடுகளில் வசிப்பவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு  கொள்வது எவ்வளவு கடினம் என்று எண்ணிய போது ,வாட்ஸ்ஆப்பின் மகத்துவம் எனக்கு புரிந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் உள்ளவர்களிடம், தொலைபேசியில் பேசுவது எவ்வளவு கடினமானது என்பதை நேரிடையாக சந்தித்தவள் நான். என்னடைய அப்பா அஞ்சல் அதிகாரியாக பணி செய்த ஊர்களில் வெளிநாட்டில் வசித்தவரிகளின் எண்ணிக்கை சில ஊர்களில் மிக அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் பணி செய்யும்  உறவினர்களுக்கு  தொலைபேசி அழைப்பை பதிவு செய்து விட்டு நாட்கணக்கில் கூட காத்திருப்பார்கள். அப்படி காத்திருந்து தொடர்பு கிடைத்தாலும் அவர்களால் தொடர்பில் தொந்தரவு இல்லாமலும், மற்றம் தொடர்ந்தும் பேசவும் முடியாது. அவர்கள் பேசினாலும் ஹலோ ஹலோ என்ற சொல்லைத்தான் அதிகமாக பயன் படுத்தும் நிலை இருக்கும். மக்களின் நிலை இது என்றால் என்னுடைய அப்பாவின் நிலை மிக பரிதாபமக இருக்கம். என்னுடைய அப்பா வெளிநாடுகளுக்கு அழைப்பை பதிவு செய்து விட்டு உறவினர்களின் பெயர், இவரகளுக்கும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் என்ன உறவு, என்ன காரணத்திற்காக  அழைப்பு பதிவு செய்யப்பட்டது, என்ற அடிப்படை காரணத்தை எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான், தொலை பேசி அழைப்பை பதிவு செய்வார். பதிவு செய்த அழைப்பு எப்பொழுது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பல நேரங்களில் சாப்பிடுவதற்க்கும்,  கழிவறைசெல்வதற்க்கும் கூட முடியாமல் போகும். இரவு முழுவதும் கண்விழித்து இருக்க நேரிடும். இதை தொடர்ந்து மறுநாள் அதிகாலை 6 மணிக்கே தபால் பை  வந்து விடும். அன்றைய நாள் பணியை, எந்த வித ஓய்வில்லாமல் செயல்படுத்த நேரிடும். நான் இவ்வாறாக இரண்டுபக்க நபர்களின் இடர்பாடுகளையும், இவர்களை இணைக்கும் அஞ்சல் அதிகாரியின் பணி சுமையையும் நன்கு அறிந்து இருந்ததால். வாட்ஸ்ஆப்பின்  மகத்துவத்தை  என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இதன் காரணமாகவே வாட்ஸ்அப் ஒரு வரப்பிரசாதம் என்று இந்த  blog க்கு  தலைப்பிட்டேன்.

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...