JOTTER PEN
இந்த பேனாவை நான் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி இருப்பேன். நல்ல கரும்பச்சை வண்ணத்தில் இருக்கும். மூடி மற்றும் பேனா நிப் பொருத்தும் இடம் கரும்பச்சைவண்ணத்திலும், இங்க் போடும் இடம் வெளிப்படையாக கண்ணாடி போன்று இருக்கம். சற்று விலை உயர்ந்த பேனா. அதன் மேல் எனக்கு ரொம்ப ஆசை. ஞாயிற்றுக்கிழமை தவறினாலும் தவறும். நான் பேனா சுத்தம் செய்வது தவறாது. சுடு தண்ணீரில் பேனாவை ஊறவைத்து நன்கு உலர்ந்த துணி போட்டு துடைத்து இவ்வாறு பராமரிப்பு மிகவும் பலமாக இருக்கும். தேர்வு என்றால் பாடத்தை தயார் செய்வது இரண்டாம் வேலைதான் பேனா மிக அருமையாக தயாராகிவிடும். அப்பொழுதுதான் நிப் ஆராய்ச்சி எல்லாம் மிக தீவிரமாக நடக்கும். உடற்பயிற்ச்சி, சங்கீத வகுப்புக்கு சென்று வந்தால் உடனே என்னுடைய பையில் உள்ள பென்சில் டப்பாலை திறந்து பேனாவின் இருப்பை உறுதி செய்துவிடுவேன். சாப்பாட்டு நேரத்தில் நான் டிபன் டப்பாவை மறந்து பென்சில் டப்பாவை மட்டும் வெளியில் எடுத்து போனதுதான் அதிகம்.இவ்வாறு என்அன்பான பேனாவுடன் நான் வாழ்ந்து கொண்டருந்த நேரத்தில் வந்தது ஒரு சோதனை, எங்கள் வீட்டின் எதிரில் ஒரு பெரிய நில உரிமையாளர் இருந்தார். அவர்கள் வீட்டில் அப்பொழுதே இரண்டு கார்கள்; இருக்கும். அவருடைய மகள் திருமணம் ஆனவர் 30 வயதிருக்கலாம். அவர் வந்து எழுதுவதற்க்கு என்னிடம் இருந்து பேனா வாங்கி போனார். ஒருநாள்,இரண்டுநாள், இப்படி போய்கொண்டே இருந்ததால், என்மனதில் தாங்கமுடியாத துக்கம் ஏற்பட்டது. வீட்டிற்க்கு போய் கேட்டால் ,என்ன சுந்தரி, நான் எங்கு போக போகிறேன், “எதிர் வீட்டிலதானே உள்ளேன்” என்பார். மற்ற சமயம் அவரின் அப்பா, என்ன பாப்பா வேண்டும், அக்காவ பார்கனுமா தூங்கராங்க என்பார்.ூ ஒருவாரம் கழிந்தது. என் பொருமையை இழந்தேன். அவர்கள் வீட்டிற்க்கு போனேன். அந்த பெரியவரிடம் உங்கள் மகள் என்னிடம் பேனா வாங்கி கொண்டுபோய் 10 நாட்கள் ஆகிறது. எப்பொழுதுதான் தருவீர்;கள் என்று சற்று கடுமையாக கேட்டேன். சற்று பொருமையாக நிதானமாக இந்தா உன் பேனா என்று கொடுத்தார்கள். நான் மிகவும் நேசிக்கும் பொருளை யாரிடமும் கொடுப்பதில்லை என்ற உறுதி எடுத்துக்கொண்டேன்.