திருவடிச்சூலம், வல்லம் குடைவரை கோவில். (25.10.21) 

திருஇடைச்சுரம் என்று அழைக்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்பொழுது திருவடிச்சூலம் என்று அழைக்ப்படுகிறது. செங்கல்பட்டு-திருப்போரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு கோவர்தனாம்பிகை (எ) இமயமடக்குடிநாயகி சமேத ஞானபுரீஸ்வர் (எ) இடைச்சுரநாதர் என்ற பெயரில் நமக்கு சிவபெருமான் அருள்பாலிக்கிறார். திருஞானசம்மந்தரால் பாட பெற்ற தலமாகும்.தெற்க்கு முகமாக இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நுழைந்தஉடன் விநாயகரை தொடரந்து,  அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. அம்பாளை தரிசனம் செய்துகொண்டே கிழக்குமுகமாக திரும்பினால் இறைவனை தரிசிக்கலாம். சிவபெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார். நேர்எதிரே நந்தி, மற்றும் பலிபீடம் அமைந்துள்ளது. 1989ல் திருமுருக கிருபானந்தவாரியாரால் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரிகிறது. இயற்கை எழிலுடன் இந்த கோவில் காணப்படுகிறது என்பதை நுழைந்த உடன் வாணரசேனை வரவேற்பின் மூலம் அறிந்து கொண்டோம்.



 இத்ததல பதிகம்.

வரிவள ரவிரொலி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக விரிவளர் தருபொழில் இனமயிலால வெண்ணிறத் தருவிகள்திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

வல்லம் குடைவரை கோவில்.

செங்கல்பட்டு-திருப்போருர் வழித்தடத்தை கடந்து செங்கல்பட்டிற்கு வலதுபுறம் திரும்பி 500 மீட்டர் கடந்தவுடன் இடதுபுறம் தமிழ்நாடு சுற்றுலா துறை பெயர் பலகையுடன் இங்கு செல்ல வழிகிடைக்கிறது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் இங்கு 3 குடைவரை கோயில்கள் உள்ளன. ஆழ்வாரகள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகும். சிவக்கொழுந்து பாவலர் 111 பாடல்கள் வேதாந்தீஸ்வரர் மேல் புனைந்துள்ளார்.10,008 ருத்ராட்சங்களால் உருவாக்கப்பட்ட மண்டபத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். முக்கண்ணனின், துணைவி முன்று கண்களுடன் காட்சி தருகிறார். ஞானாம்பிகை என்ற பெயருக்கு பொருத்தமாக ஞானத்தை நமக்கு  மூன்றாவது கண் மூலம் அருள்கிறார். 10 அடி தூரத்தில் கம்பி கதவு வழியாக இறைவனை நாங்கள் வழிபட்டோம.;

“எரித்தவன முப்புர எரியின மூழ்கி தரித்தவன் கங்கையை தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரிந்தவன் உறைவிடம் திருவல்லமே.  ஞானசம்மந்தர் அருளியது.



சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...