ஸ்தல சயன பெருமாள். (மகாபலிபுரம்) (15.7.2021
ஸ்தல சயன பெருமாள்.
நாங்கள் இந்த முறை சென்னயில் இருந்து வரும் பொழுது கிழக்கு கடற்கறை சாலை வழியாக வந்ததால் மகாபலிபுரம் சென்றோம். பல்லவர் காலத்து சிற்பக்கங்கள் அனைவரும் அறிந்ததே. மகாபலிபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் பற்றியதே இந்த blog. 108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாகவும், 12 ஆழ்வார்களில் ஒருவாரன பூதத்தாழ்வார் அவதரித்த தலம் என்றும், திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்றது என்ற பல சிறப்புகளை கொண்டது இந்த தலம்.
புன்டரீக மகரிஷி
இந்த கோவிலை நமக்கு அளித்த புன்டரீக மகரிஷி பற்றி அறிந்துக்கொள்வோம். 1008 தாமரை மலரை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு திருப்பாற்கடல் பெருமாளுக்கு சமர்பிக்கிறேன் என்று சொல்லி கடலில் இறங்கி செல்கிறார். கடலின் ஆழமும், அலைகளின் இடையூறு காரணமாக அவரால் தொடர்ந்து செல்ல முடியாமல் கடல் நீரை இறைக்கிறார். இவ்வாறு பல ஆண்டுகள் செல்கின்றன. மகாவிஷ்ணு இவர்மேல் இரக்கம் கொண்டு முதியவர் வேடம் தரித்து வந்து கடல் நீரை இறைக்க முடியுமா? வேறு வேலை எதாவது பாரும் என்று சொல்கிறார். ஆனால் மகரிஷி அவர் வேலையில் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், முதியவர் வேடம் தரித்து வந்த பெருமாள், எனக்கு பசிக்கிறது உணவு கொண்டுவாரும் முதலில், என்று பணிக்கிறார். அதற்கு மகரிஷி உங்களுக்கு உணவு கொடுத்து விட்டு நான் மீண்டும் பெருமாளுக்கு தாமலை மலர் அர்பணிக்க கடலில் இறங்கி செல்வேன் என்று கூறி செல்லிறார். உணவுடன் வந்த மகரிஷி, பூமியில் கிடந்த கோலத்தில் அனைத்து தாமரை மலருடன் காட்சியளிக்கிறார், திருப்பார்கடல் பரந்தாமன். இறைவனை கண்டு களிப்புற்று தரிசித்த மகரிஷி நான் எப்பொழுதும் உங்களின் திருவடியிலேயே இருக்க வேண்டும் என்று வரம் கேட்கிறார். இங்கு பெருமாள் ஆதசேஷன் மேல் சயனிக்காமல் பூமியில் சயனித்துள்ளார். இவர் பொற்பாதங்களில் தாமரை பூ உள்ளது. திருவடியின் அருகிலேயே மகரிஷி கைகூப்பி நின்றநிலையில் உள்ளார். தாயார் நில மங்கை தாமரை மீது அமராமல் பூமியிலேயே அமர்ந்துள்ளார்.