சிக்கிம் மாநில சுற்றுலா.

சிக்கிம் மாநில சுற்றுலா. (feb 2021 and june 2010)

Pakyong new Airport

   சென்னையில் இருந்து விமானம் (27.2.21) மூலம் பாக்டோக்ரா என்ற  விமான நிலையத்திற்கு   சென்றோம். முதலில் நாங்கள் சென்னையில் இருந்து பேக்கியாங் (Pakyong) என்ற விமான நிலையத்திற்கு செல்ல தான்  பயணசீட்டு வாங்கியிருந்தோம். ஆனால் விமானம் மாற்று பாதையை தேர்வு செய்ததால் நாங்கள் பாக்டோக்ரா சென்றோம். இங்கிருந்து கேங்டாக் (Gangtok), சாலை வழியாக செல்ல 5மணி நேரம் பயணம் செய்தோம். இதை தவிர்பதற்காகத்தான் நாங்கள் பேக்கியாங் விமான நிலையத்திற்கு பயணசீட்டு எடுத்தோம். 2010-ல் நாங்கள் (நான் என்னுடைய கணவர்,மகன்,மகள்) சென்ற போது பேக்கியாங் என்ற விமான நிலையம் கிடையாது.  இந்த விமான நிலையம் செப்டம்பர் 24, 2018 ஆம் ஆண்டு நமது பிரதமர் திரு. நரேந்தமோடி அவர்களால் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் (நான்,என்கணவர், என்னுடைய மகன் மற்றும் மருமகள்) பிரத்யேகமாக வாகனம் வைத்துக்கொண்டு டீஸ்டா(Teesta) ஆறு மற்றும் கொரோனேஷன் பாலம் வழியாக லாசுங் (Lachung)  சென்றடைந்தோம். 

(June 2010- Photos)
















மறுநாள் காலை யும்தாங் பள்ளத்தாக்கு (Yumthang Valley) செல்வதற்க்கு இங்கேதான் தங்க வேண்டும்.  பிப்ரவரி மாதம்  என்பதால் 7 டிகிரி தான் இருந்தது. காலை 6மணிக்கே நாங்கள் யும்தாங் பள்ளத்தாக்கு வழியாக (Zero-Point) 0 தட்ப வெப்பநிலையுள்ள இடத்திற்கு சென்றோம். ஆக்ஸிஜன் அளவு சற்று குறைவாக இங்கு இருப்பதால் சிலநபர்களுக்கு மூச்சுத்தினறல்  ஏற்படும், இந்த Zero-Point ல். கடந்த முறை போன்று இல்லாமல் (ஜுன் மாதம் சென்றதால்); சாலை இருமருங்கிலும் உள்ள மரம், பாறை, செடிகள் மீது உறைந்த பனி பார்பதற்கு மிகவும் குதூகலத்தை ஏற்படுத்தியது. இந்த இடம் யும்தாங்கில் இருந்து 15 (கி.மீ ) தொலைவிலும், 4,724 அடி உயரத்தில் உள்ளது.  மதிய உணவிற்கு லாச்சுங் திரும்பிவிட்டோம்.

Gurudongmar Lake

 மதிய உணவை முடித்துக்கொண்டு குருடோங்மார் ஏரி (Gurudongmar Lake) செல்லாவதற்காக  லாச்சன் (Lachen)  என்ற இடத்திற்க்கு சென்று விட்டோம். குளிர் மிக அதிகமாக இருந்தது, சாப்பிடுவதற்கு எதுவும் ஏதுவாக கிடைக்கவில்லை, மயான அமைதி, எப்படியோ அந்த இரவை கழித்துவிட்டோம். அதிகாலையிலேயே ஏரி பார்க கிளம்பிவிட்டோம். போகும் வழியில் சக பயணிகள் யாருமே இல்லை. நாங்களும் எங்களுக்குள் பேசிகொள்ளவில்லை. எங்கு பார்த்தாலும் உறை  பனிதான். சற்ற தூரத்தில் நின்ற வாகனத்தையும், எங்களை போன்ற சக சுற்றுலா பயணிகளை பார்தபின்புதான் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றால், இயற்க்கை நமக்கு அனுமதி அளித்தால் தான் நம்மால் அனைத்து இடங்களையும் பார்க்க முடியும். சென்ற வழியில் பெரும்பாலான இடங்கள்  ராணுவ பகுதிகளாகவே இருந்தன. 2010 ல் நாங்கள் சென்ற போது இந்த இடத்தை அறிந்திருக்கவில்லை. இந்த ஏரி உலகத்திலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள ஏரியும், சிக்கிம் மாநிலத்தின்  பெரிய ஏரியும் ஆகும். 5,430 மீட்டர்(17,800 அடி)  உயரத்தில் அமைந்துள்ளது. நாங்கள் இந்த குருடோங்மார்  ஏரிக்கு மிக அருகில் சென்று விட்டோம். ஆனால் நாங்கள் சென்ற தினத்தில் பனிபொழிவு அதிகமாக  இருந்ததால் ராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டது. உடனே திரும்பி விட்டோம். வரும் வழி முழுவதும் பனிப்பாறைகள் சாலையை மறைத்தன.  ஓட்டுனரே மிகவும் அச்சம் கொண்டார். மிக குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலா பயணிகள் இருந்தனர். நாங்கள் இடைஇடையே பனி கட்டியில் நன்கு விளையாடினோம். என்னுடைய  சுவிட்சர்லாந் ஆசையை கூட இந்த பனி விளையாட்டு நிறை வேற்றியது. நாங்கள் இங்கிருந்து கேங்டாக் திரும்பினோம்.Gangtok  ல் இருந்து நாதுல்லாபாஸ் (Nathula Pass) 53 கி;.மீ. தூரத்தில் உள்ளது.

June 2010- Photos





Nathula Pass

 14,140 அடி உயரத்தில் உள்ளது. 2010 ல் நாங்கள் சென்ற போதும் நிலச்சரிவு காரணமாக செல்ல முடியவில்லை. இந்த முறை நிச்சயமாக பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் சென்றால், சற்று தூரத்திற்க்கு முன்பே ராணுவத்தினரால் நிறுத்தி வைக்கப்பட்டோம்.  அனுமதி கிடைக்குமா கிடைக்காதா? என்று ஆவலுடன்  காத்திருந்த நேரத்தில் 400க்கு மேட்பட்ட  பயணியற் வாகனம் காத்து நின்றது. அப்பொழுது துப்பாக்கி சூட்டின் சத்தத்தை நன்கு கேட்கமுடிந்தது. (இந்தியா-சீனா-எல்லை) ராணுவத்தினரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் காத்திருந்த பயணியர் வாகனம் போன்று எங்களுடைய வாகனமும் கிளம்பியது. பாபா மந்திர் (Harbhajan Singh Baba Mandir) பார்த்து விட்டு கிளம்பினோம். யாக் சவாரி செய்தோம் (Tsomo Lake)  ஏரிக்கரையில். 11,700 அடி உயரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது.

(June 2010- Photos)





(RUMTEK MONESTERY)


My First Flight Journey Chenai to Bagdogra



கேங்டாக்

அன்று  மாலை கேங்டாக்கில் தங்கிவிட்டோம். கேங்டாக் மகாத்மா காந்தி சாலை  மிகவும் அற்புதமாக இருக்கம் பார்பதற்க்கு. சாலையின் முகப்பில் காந்தி கையில் தடி ஊன்றி நடப்பது போன்ற சிலை இருக்கும். கேங்டாக் நகரம் பார்பதற்க்கு ரம்யமாகவும் தூய்மையாகவும் காணப்பட்டது. குறிப்பாக காந்தி சாலை முத்தாய்பாக அமைந்திருந்தது.  மறுநாள் டார்ஜிலிங் கிளம்பினோம். 

நாம்ச்சி(Namchi)

 போகும் வழியில் நாம்ச்சி(Namchi) என்ற இடத்தில் உள்ள சித்தேஸ்வர் கோவிலை தரிசித்தோம். தெற்கு சிக்கிம்மில் சோலோபோக் (Solophok Hill) என்ற மலை பகுதியில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கோவில் மக்களின் தரிசனத்திற்கு வந்தது. ஹிந்தி மொழியில் சார்தாம் என்றால் நான்கு புனித தலங்கள் என்று பொருள். உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள  பத்திநாத், ஒடிசா மாநிலத்தில்  உள்ள பூரி, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா இந்த நான்கு கோவில்களும் ஹிந்து மதத்தின் முக்கிய புனித தலங்களாக கருதப்படுகிறது. அதனால் இந்த நான்கு கோவில்களின் அமைப்பை அப்படியே கொண்டு கட்டப்பட்டுள்ளது. 12 ஜோதிர்லிங்கம்  போன்று 12 கோவில்களும், இது மட்டும் இல்லாமல் 108 அடி உயரத்தில் ஒரு சிவபெருமானின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. Monastery  என்ற புத்தரின் கோவிலுக்கும் சென்றோம்.

Samdruptse Monastery

 Samdruptse    என்ற இடமாகிய இங்கு 135 அடி உயரத்தில் குரு பத்மசம்பவா சிலை வைக்கப்பட்டருந்தது. நான் 2010 சென்ற போது கேங்டாக்  அருகில் உள்ள ரும்டெக் (Rumtek Monastery)  என்ற புத்தரின் கோவிலுக்கு சென்றோம். நான் என்வாழ்வில் பார்த்த முதல் புத்த விகார் இதுதான். கட்டிட அமைப்பும், விகார்  அமைந்த சூழலும் என்னை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் மிக பெரிய புத்தவிகார் தவாங் புத்தவிகார் பார்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். இது அருணாசலபிரதேச மாநிலத்தில், தவாங் மாவட்டத்தில் உள்ள தவாங் என்ற நகரில் அமைந்துள்ளது.

டார்ஜிலிங்

    நாமச்சியில் இருந்து டார்ஜிலிங் செல்ல இரவு 7 மணியாகிவிட்டது. டார்ஜிலிங் தட்ப வெப்ப நிலை அதிக பட்சம் 13 டிகிரியாக இருந்தது. ஒருநாள் உள்ளுர் சுற்றுலாவுக்கு திட்டமிட்டிருந்தோம். அதிகாலை 3.30 மணிக்கு Sunrise  (Tiger Hill)  ஐ குளிர் காரணமாக தவிர்த்தோம். மலைகளின் அரசி சுத்தம் இல்லாமல் காணப்பட்டாள். Narrow Guage Train (Toy Train)  பயணம் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்தது.  இதற்காக ரயில்வே துறையில் வாங்கிய கட்டணம் மிக அதிகம்;. ஒரு மணி நேர பிரயாணத்திற்க்கு ஒரு நபருக்கு 1,600ரூ வசூலித்தனர். பயணவழி தடங்களும் ரம்யமாகவே இல்லை. சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங் சென்றால் Whatsapp Video  போன்று இருக்குமோ? (அழகாக) தெரியாது. ஆனால் பயண நேரம் மிக அதிகம். தற்பொழுது  அந்த சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலை  நாங்கள் பார்க்கவே இல்லை. Winch  பயணம் செய்தோம். இது பெரும்பாலான இடங்களில் உள்ளது. தேயிலை தோட்டமும் பார்க்க பசுமையாக இல்லை.

(2010- Zero Point Photp)




Tibetan Refuge Self Help Centre 

Tibetan Refuge Self Help Centre  (திபெத் அகதிகள்  சுயஉதவி முகாம் சென்றோம். 6.3.21 இன்று பாக்டோக்ராவில் இருந்து சென்னை திரும்பினோம்.   


 Below  Photos ( Feb 2021.)

































சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...