விஜயராகவ நாயக்கர்.

விஜயராகவ நாயக்கர்.

   மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலையம் பலராலும் நன்கு அறியப்பட்டதும், வழிபடப்படுகின்ற ஆலையமும்; ஆகும். இந்த ராஜகோபாலசாமியின் அருளினால் நமக்கு கிடைத்த மற்றொரு ஆலையத்தைபற்றி கூறவே இந்த blog 1982ல் என்தந்தையுடன் திருமக்கோட்டை என்ற கிராமத்தில் வசித்தப்போது, அருகில் உள்ள மன்னார்குடிக்குசெல்லும் போதெல்லாம் ராஜகோபாலசாமியை நாங்கள் வழிபடாமல் வந்ததே கிடையாது. (39 அண்டுகளுக்கு பிறகு) 2021 ஜனவரியில் எனது தஞ்சாவூர் ஒவிய ஆசிரியரின் மகன் கல்யாணத்திற்க்கு  செல்லும் வாய்பை பயன்படுத்தி மீண்டும் ராஜகோபாலசாமியின் அருள்கிடைக்கப்பெற்றேன். ராஜகோபாலர் இங்கே இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். விஜயராகவநாயக்கர் மூலம் கிடைத்த மற்றொரு ராஜகோபாலசாமி ஆலையம் பற்றி தெரிவிக்கவே இந்த கட்டுரை. விஜயராகவநாயக்கர் 1633 முதல் 1673 வரை தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க வம்சத்தை சேர்ந்தவர். தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் வழியில் அய்யம்பேட்டை என்ற ஊருக்கருகில் நல்லிச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ராஜகோபாலசாமி கோவில், இங்கே ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபாலசாமியாக காட்சியளிகிறார் பெருமாள். இந்த கோவில் விஜயராகவ நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. மன்னார்குடி ராஜகோபாலசாமி மீது கொண்ட பக்தியால் தினமும் தேரில் சென்று தரிசித்து வந்தார். இந்த நல்லிச்சேரி கிராமம் வழியா செல்லும் போது ஒரு நாள் இயற்க்கை சீற்றத்தின் காரணமாக மன்னார்குடிக்கு செல்ல முடியவில்லை. தொடர்ந்து செல்ல முடியாமல் இந்த கிராமத்திலேயே தங்க நேருகிறது. அன்றைய இரவு, இறைவன் அரசனுக்கு கனவில் காட்சி அளித்து இங்கு ஓர் ஆலையம் அமைக்க உத்தரவிடுகிறார். இதை தொடர்ந்து இந்த அரசன் மறுநாள் காலையில் நீராடும்போது கருடனின் காட்சி கிடைக்கிறது. இந்த கருடனை தொடர்ந்து சென்ற போது அந்த கருடன் அமர்ந்த இடத்திலேயே கோவில் கட்ட தீர்மானித்து ஆலையம் அமைக்கும் பணி தொடர்கிறார். விஜயராகவ நாயக்க மன்னர், ஆலையத்தில் இறைவனை எழுந்தருளசெய்து குடமுழுக்கு செய்துவித்து நாள்தோரும் இறைவனை சேவித்து வந்தார்;. இந்த நல்லிச்சேரி கிராமம் என்னடைய புகுந்த வீட்டு கிராமம் என்பதால் வேணுகோபாலனான ராஜகோபாலசுவாமியை அடிக்கடி சேவிக்கும் பாக்யம் கிடைக்கப்பெற்றுஇருக்கிறேன்.  




சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...