தெலுங்கு மொழி அறிவோம்.
நமது பாரதத்தில் பேசபடும் பல மொழிகளில் தெலுங்கும் ஒன்று, என்றும், சுந்தரதெலுங்கினில் பாட்டிசைத்து என்ற பாரதியாரின் பாடல் வரிகள் மூலம். கேட்பதற்க்கு மிகவும் இனிமையான மொழி, என்பதை தவிர நான் இந்த மொழியை பற்றி இவ்வளவு நாட்கள் யோசித்தது கூட கிடையாது. எனக்கு கர்நாடக சங்கீதத்தின் மீது விருப்பம் இருந்தாலும் நான் தமிழில் சங்கீத மும்மூர்திகளான முத்துத்தாண்டவர்,அருணசால கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, இவர்கள் மற்றும் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் போன்ற பிற பாடலாசிரியர்களின் பாடல்கள், மற்றும், பக்தியால் இசைக்க, தேவாரம், திருவாசகம், மற்றும் திருப்புகழ் பாடியும், (பூஜை அரை பாடகி) கேட்டும், வருகிறேன். எனக்கு கடந்த மாதம் தியாகராஜர் ஆராதனைவிழாவில் (உள்ளுரில்) நகிழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் தியாகராஜரின் பாடல்களுக்கு இடையில் இவரை பற்றிய பல அரிய மற்றம் சுவையான தகவல்களை மேடையில் பகிர்வதற்காக படித்து அறிந்து கொண்டேன். தியாகராஜர், இறைவன் ஸ்ரீராமர் மேல் பக்தி கொண்டு எழுதிய பாடல்களை பாட முடியாவிட்டாலும் படித்துணர முடியவில்லையே என்ற ஏக்கத்தை இந்த தெலுங்கு மொழி ஏற்படுத்தியது. தியாகராஜரின் கீர்த்தனைகளை மொழிபெயர்ப்பதாலும், பாடலுக்கான விளக்கத்தை படித்தாலும் மன நிறைவு ஏற்படாது. ஏன் என்றால், படிப்பது என்பது வேறு உணர்வது என்பது வேறு.