இ.பைக் அனுபவம்

                         இ.பைக் அனுபவம்

 சுற்றுச்சூழல் மீது மிகுந்த  ஆர்வம் கொண்ட நான் என்னுடைய மின் இருசக்கர வாகன அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.  மின் இருசக்கர வாகனம் வாங்க விருப்பம் இருந்த அதே அளவு தயக்கமும் இருந்தது எனக்கு. விலையில் பெரிதாக வித்யாசம் எதுவும் கிடையாது. இதன் உழைப்பு பற்றிய பல சந்தேகங்கள் எனக்குள் தோன்றின. ஆனால் அதை பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள மின் இருசக்கர வாகனம் பயன்படுத்தியவர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் விருப்பத்தின் பேரில் வாகனத்தை பயன் படத்திப்பார்த்து பின் என் கணவரின் அனுமதி பெற்று விற்பனை நிலையத்துக்கு சென்றால், அவர்கள் நீங்கள் வாகனத்திற்கான முழு தொகையையும் செலுத்திய பின்புதான் வாகனத்தை பதிவு செய்து தருவோம் என்றனர். என் விருப்பத்திற்காக என்னுடைய கணவர் அதற்கும் ஒப்புக்கொணடார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியும் வாகனம் கைக்கு வரவில்லை. (இதற்கிடையில் என் தோழி மூலம் நான் நுகர்வோர் நீதி மன்றத்திற்கு சென்றதெல்லாம் ஒரு தனிக்கதை). இந்த ஆறுமாத கால தாமதத்தால் நான் சந்தித்த  சங்கடங்கள் ஏராளம். என்னுடைய scooty  யை, மகள் எடுத்து சென்றுவிடுவாள். என்னுடைய கணவர் நீதானே மின் வாகனம் வேண்டுமென்றாய் அது வரும்வரை பொது வாகனத்தை பயன் படுத்திக்கொள் என்பார். நான் ஒரு நாள் பொறுமை இழந்து வண்டி பதிவு செய்த கடைக்கு சென்று  சண்டை பிடித்ததில் உரிமையாளர் ஒரு பழைய வாகனத்தை பயன் படுத்த கொடுத்ததை, நான் வாங்கி கொண்டு வந்து விட்டேன். இந்த செயலை என் கணவர் என் மகனிடமும் அவரின் அண்ணனிடமும் பகிர்ந்ததில்  அவர்கள் போனில் என்னை கடிந்தனர்.  கணவருடன் சென்று AMPERE 60 W  என்ற வாகனத்தை வாங்கி கொண்டுவந்தோம். நாங்கள் பதிவு செய்த வாகனத்தை விட இது 8000 ருபாய்  அதிகம். என் கணவர் 6 மாத காலம் எங்களுடைய பணம் தங்களிடம் இருந்தமையால் கூடுதல் தொகையை தர இயலாது என்று கூறி, ஒரு வழியாக  மின் வாகனத்தை வாங்கிகொண்டு வந்தோம். இப்பொழுது வண்டியின் அனுபவத்தை தொடர்கிறேன். மின் வாகனத்துக்கு காப்பீடு மற்றும் ஓட்டுனர் உரிமம் தேவைஇல்லை என்ற நிலை வேறு இருந்தது.  தலைகவசம் அணிய வேண்டும் என்ற  சட்டமும் இதற்க்கு பொருந்தாது. தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நிலை உள்ள காலத்தில் என்னை பார்த்து பொறாமை பட்டவர்கள் அதிகம். நல்ல சமமான சாலையாக இருந்தால் 60 கி.மீட்டர் வேகத்தில் கூட வண்டி ஓடும். பெட்ரோல் வாகனம் போன்று Power brake   இருக்காது பழைய இருசக்கர வாகனம் போன்று Wire brake  தான் இருக்கும்.brake  ஐ  நன்கு பிடித்துவிட்டவுடன் ; வண்டி  உடனே வேகம் எடுக்காது.  வாகனத்தின் body யில் பயன் படத்திய Plastic, Horn,Stand   முதலியவற்றின் தரம் மிக குறைவாகவே இருந்தது. வண்டிPuncture ஆனால்  குறிப்பிட்ட கடைக்கு மட்டுமே  எடுத்து செல்ல முடியும். மற்ற வண்டி Mechanic  இதை சீர்செய்வதில்லை. வேலையை நன்கு தீர்மானிக்க முடிந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாகனம் பயன் படுத்த எளிதாக இருக்கும். வாகனத்தின் Battery மூன்று ஆண்டுகளில் அதன் சக்தியை இழக்காரம்பிக்கும். கைபேசி மற்றும் மடிக்கணினி போன்றே இரண்டாவது முறையாக பயன்படுத்தும் Battery யின்  உழைப்புக்காலம் குறைவாக இருக்கும். இருவர் செல்லும் போது வேகம் சற்ற குறைந்து, சேமித்த மின் சக்தியின் அளவும் குறையும். சேமித்த மின் சக்தியின் அளவு குறையும் போது, வேகத்தின் அளவும் குறையும். பெட்ரோல் வாகனம் போன்று எச்சரிக்கை சைகையும் உண்டு. சேமிப்பு குறைவாக உள்ள நேரத்தில் 20 கி.மீட்டர் வேத்தில் தான் செல்லும்.    மின் இருசக்கர வாகனத்தின் சிறப்பையும் கட்டாயம் கூற வேண்டும். Zero Maintenance மற்றும்   பெட்ரோல் வாகனம் போன்று  நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தாமல் இருந்தாலோ அல்லது மழையில் நனைந்தாலோ  வாகனத்தில் Starting Problem கிடையாது. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் பெட்ரோல் வாகனம் மற்றும் மின் வாகனம்   இரண்டிற்கான செலவினங்களும் ஒன்றாகவே இருக்கம். முதல் மூன்று ஆண்டுகள் சிறப்பாக இயங்கும்.மறு விற்பனை மதிப்பு மிக குறைவு.  புழைய வாகனம் 4000 த்திற்க்கு வாங்கினாலும், புதிய மின்கலம் வாங்க 18 முதல் 20 000 செலவாகும்.  சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படத்த வில்லை என்ற ஆத்ம திருப்தி மின் வாகனத்தை பயன்படுத்திய போது எனக்கு கிடைத்தது.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...