என் இசைப்பயற்சி பயணம்.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது நான் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளஆரம்பித்தேன். இதுவரை கற்க வாய்பில்லாத ஊர்களில் நாங்கள் வசித்து வந்தோம். திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் அலுவலகத்தில் பணி மாற்றம் கிடைத்தது என் தந்தைக்கு திருக்காட்டுக்கள்ளி, சர்.சிவசாமிஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சேர்ந்தேன். மதியம் 1 இருந்து 2 மணி வரை உணவு இடைவேளை அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டு பின் எங்கள் பள்ளியில் பாட்டு ஆசிரியராக பணியாற்றிய மங்களம் ஆசிரியையிடம் பாட்டு கற்றுக்கொண்டேன். அந்த ஒரு மணிநேரத்தில் என்னை போன்ற வேறு சில மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியரும் கற்றுக்கொண்டார். பள்ளியில் பணியாளர்கள் அறையை ஒட்டி ஒரு அறை இருக்கும் அங்கு தான் எங்களுக்கு வகுப்பு எடுப்பார். 95 சதவிகிதம் நான்தான் ஆர்மோனிய பெட்டியை எடுத்து வைத்து மற்ற மாணவிகள் எல்லாம் வந்த உடன் ஆசிரியரை அழைத்து வருவேன்.மீண்டும் வகுப்பு முடிந்த உடன் ஆர்மோனிய பெட்டியை எடுத்துவைத்துவிட்டு வகுப்பு திரும்புவேன். இந்த மூன்று ஆண்டுகள் ஒன்பது வகையான பாடம் முடித்து, வர்ணம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.(நின்னுக்கோரி வர்ணம்)அப்பாவுக்கு பணி மாற்றம் அய்யம்யபேட்டைக்கு இது (தஞ்சாவூர் கும்பகோணம் மார்கத்தில் உள்ளது). அய்யம்பேட்டையில் போஸ்ட் ஆபீஸ்க்கு வரும் பலரிடமும் சொல்லி வைத்ததில் கிடைத்தார் சோனி பாகவதர்(அவருடைய இயற்பெயர்தெரியாது). இந்த வகுப்பில்; சிறிய மாற்றம் இங்கு ஆசிரியர் எனக்காக காத்துக்கொண்டிருப்பார். நான் இப்பொழுது அய்யம்பேட்டை புனித கேபிரியேல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நான் சோர்வாகவும் பசியாகவுமே பள்ளியில் இருந்து வருவேன். இந்த நேரத்தில் பாட்டு ஆசிரியர்வேறு எனக்காக காத்துக்கொண்டிருப்பது. மிகவும் சங்கடமாக இருக்கும். நான் உடனே வணக்கம் சொல்லி விட்டு வகுப்பை ஆரம்பித்து விடுவோம். முதல் நாள் நீ ஏற்கனவே பாட்டு கற்றுக்கொண்டு இருந்தாய் அல்லவா நீ ஒரு பாட்டு பாடு என்றார். நானும் பாடினேன். நீ நன்றாக தான் பாடுகிறாய் ஆனால் சொல்லி கொடுத்தது சரி இல்லை. நாம் முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்றார். மீண்டும் சரளி வரிசை தொடங்கினோம். மங்களம் டீச்சருக்கு மாதம் 5ரூபாய் கட்டணம் ஆனால் சோனி பாகவதருக்கு 10ரூபாய் எனது பெற்றோர்கள் வேறு அவருக்கு தொண்டு செய்து கொண்டிருந்தனர். நன்கு வெற்றிலை பாக்கு போடுவார.; அப்பா அவ்வப்போது வாங்கி தருவார். அம்மா நல்ல பில்டர் காப்பி போட்டு தருவார். பாகவதர் ரொம்ப ஆசாரம் எங்களுடைய பழக்கங்களை அவரால் ஏற்று கொள்ளவே முடியாது. இதற்க்கு உதாரணமாக நடந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கும். எங்கள் வீட்டில் கூடத்தில் தான் வகுப்பு நடக்கும். சுவற்றில் வரிசையாக கண்ணாடி டம்பளர் வைத்திருப்போம்.அப்பாவுடைய நண்பர்கள் வந்தால் காப்பி மற்றும் டீ கொடுப்பதற்க்கு. அவர் அந்த கிளாசை பாரத்த உடன்; என்னிடம் இதில் யார் காப்பி குடிப்பார்கள் என்று கேட்பார். நான் உடனே நாங்கள் குடிக்க மாட்டோம்;. என்பேன்;. ஆனால் அவர் நம்ப மாட்டார். மீண்டும் இரண்டு நாட்கள் கழீத்து இதையே கேட்பார். ஏன் என்றால் அவருக்கு நாங்கள் வாய்வைத்து குடிப்பமோ என்ற சந்தேகம். இதைத்தவிர என்னுடைய தாத்தா அந்த கூடத்தில் ஓர் பக்கமாக கட்டிலில் இருப்பார். அவர் எப்பொழுதம் டம்ளரில் விளிம்பு இருந்தாலும் வாய்வைத்துதான் குடிப்பார், ஏன் என்றால் அவருக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் பாகவதர் அதை புரிந்து கொள்ளாமல், என்ன அதிசயம் ஒரு வயதானவர்; எச்சல் செய்து குடிக்கலாமா? என்று சொல்லிக்கொண்டே இருப்பார். என்னுடைய அப்பா வெளியில் அலுவலக விஷயமாக செல்லும் போது வேஷ்டி இல்லாமல் Pant போட்டுக்கொள்வார். பாகவதர் பாட்டு எடுக்கும் நேரத்தில் என்னுடைய அப்பா Pant போட்டுக் கொண்டால் அவ்வளவுதான் பாகவதர் டென்ஷன் ஆகிவிடுவார். இவ்வாறு பல செயல்களுக்கு இடையில் என்னுடைய பாட்டு பயிற்ச்சியும் நடை பெற்று, அதே நின்னுக்கோரி வர்ணம் ஆரம்பித்தார் நம்பவே முடியாது உங்களால் அப்பாவுக்கு பணி மாற்றம் திருமக்கோட்டைக்கு. திருமக்கோட்டை என்பது மன்னார்குடியில் இருந்து15 கி.மீட்டர். இங்கு பாட்டு கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடையாது. அப்பாவுக்கு பூண்டிக்கு பணி மாற்றம் இது அப்பா எனக்காக கேட்டு வாங்கிக்கொண்டது. தஞ்சாவூர் அரசினர் பெண்கள் கலைக் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் சேர்ந்தேன்;. தஞ்சாவூரில் போழக்குடி கணேசஐயர் என்பவர் கர்நாடக சங்கீத பாடகர் மிகவும் பிரபலமானவர். இவருடைய மகள் பூண்டியில் அவரது கணவருடன் வசித்துவந்தார். அவரிடம் தொடர்ந்தது என்னுடைய சங்கீத பயிற்ச்சி. ஆனால் தற்பொழுது நான் கீர்தனைகள் மட்டுமே கற்றுக்கொண்டேன். குறிப்பாக தமிழ் கீர்தனைகள் மட்டுமே. 18 வயது ஆகிவிட்டதால் என்னுடைய விருப்பம் நன்கு புரிந்தது. 1987 பி.ஏ பொருளாதாரம் முடித்துவிட்டேன். ஓரளவுக்கு பாடல்கள் கிருஷணலீலாதரங்கினி என கற்றுக்கொண்டேன் ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அல்ல. ஏன் என்றால் என்னுடைய ஆசிரியை மகப்பேறுக்காக தஞ்சாவூர் சென்று விட்டார். சூழ்நிலையால் எனக்கு தடை வருமே தவிர என்னால் முடியாது என்று நான் எதையும் நிறுத்தியது கிடையாது.1999 ஆம் ஆண்டு மகளுடன் நானும் சேர்ந்து கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன்;. சென்னை மீனம்பாக்கம் DGQA வளாக கேந்திரிய வித்யாலயாவில் எனது குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு உள்ள பாட்டு டீச்சரிடம் எனது மகளும் நானும் பாட்டு கற்றுக்கொண்டோம். பள்ளி நேரம் முடிந்து தனி பயிற்ச்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் பாட்டு டீச்சர். என் மகளையும் சேர்த்துவிட்டு நானும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். நானும் அவர்களுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஒரு 10 பாடல்கள் கற்றுக்கொண்டிருப்பேன். வந்தது சோதனை எனக்கு அல்ல என் ரூபத்தில் வந்தது பாட்டு டீச்சருக்கு. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பள்ளி இடம் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி சங்கீத ஆசிரியை சம்பாதிக்கிறார் என்று குற்றப்பத்திரிக்கை அனுப்பிவிட்டனர் பள்ளி முதல்வருக்கு. உடனே பள்ளியில் எந்த தனி பயிற்ச்சி வகுப்பும் எடுக்க கூடாது என்று ஒரு சுற்றரிக்கை வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் பாட்டு டீச்சரின் வாழ்வாதாரத்துக்கு இந்த தனி பயிற்ச்சி மூலம் கிடைத்த வருமானம் உதவியாக இருந்தது என்றும், என்னால் வருவாய் இழுப்பு எற்பட்டு விட்டது என்று அந்த ஆசிரியை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். எனக்கு வருத்தமாகவும் என் மேல் ஒரு பழியுணர்ச்சி ஏற்பட்டதாகவும் எண்ணி வருந்தினேன். இதேநேரத்தில் இதற்கு தீர்வு கானவும் முற்பட்டேன். இந்த நேரத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த டீச்சர் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் குடிபெயர்ந்து வந்துவிட்டார். நான் அதை பயனிபடுத்திக்கொண்டு 5துக்கு மேற்பட்ட மாணவர்களை இசைப்பயிற்ச்சிக்கு தேர்வு செய்து கொடுத்தேன். என்மனது, சற்று திருப்தி ஏற்பட்டது.மகள் என்னுடைய சிறிய மாமியாரின் தோழியிடம் பாட்டு கற்றக்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் நான் தொடரவில்லை. 2003செப்டம்பர் மாதம் என் கணவருக்கு பணி மாற்றம் புதுச்சேரிக்கு. என் மகள் வாய்பாட்டில் விருப்பம் மில்லாமல் வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள். இந்தஇடத்தில் என்கணவரின் சங்கீத விருப்பம் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. அவரும் வாய்பாட்டு கற்றுக்கொண்டு தொடரமுடியாமல் போன கதையை என்னிடம் பல முறை சொல்லியுள்ளார். கி.விரமணராஜு(பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் பாடிய க.வீரமணி தம்பியின் புதல்வர்) தான் சென்னையில் சங்கிதம் கற்றுக்கொண்டிருந்தேன் என்று சொல்லுவார். பிறகு தபேலா கற்றுக்கொண்டிருந்தார். என்ன காரனமோ தெரியவில்லை. தீடீர் என்று ஒரு நாள் சென்னைக்குப்போய் YAMAHA KEYBOARD ஐ 425 வாங்கிவந்து விட்டு இனிமேல் கீபோடு கற்றுக்கொள்ள போகிN;றன் என்று சொல்லி மேற்கத்திய இசை பாணியை பின்பற்றி கற்றுக்கொண்டார். ஏதோ வாசிப்பார் அடிப்படை பாடம் முடிந்தவுடன் "மண்ணில் இந்த காதல்இன்றி யாரும் வாழக்கூடுமோ " மற்றும் "வாழ்வேமாயம்" என்றஅந்த இரண்டு பாடலையும் பாடி வாசித்தக் கொண்டே இருப்பார். எனக்கு இது மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது. பேசாமல் கர்நாடக பாணியில் கற்றுக்கொண்டால் இறைவுணர் மேலோங்கும் எதற்கு இந்த வயதில் தேவை இல்லாத வேலை என்று நான் கருத்து தெரிவித்தேன். பணிமாற்றம்,பணி உயர்வு வேலை பளு காரணமாக தொடரமுடியாமல் போனது என் கணவருக்கு. கீபோர்டு வீட்டில் பயன்பாடு இல்லாமல் இருந்தது. எனக்கு மீண்டும் சங்கீதம் கற்றுக்கொள்ளும் சிந்தனையை தூண்டியது;. ஹார்மோனியம் வாசித்துக்கொண்டே பாடுவது போல் கீபோர்டு வாசித்துக்கொண்டே பாட கற்றுக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உடனே கீபோர்டில் கர்நாடக சங்கீதம் யார் கற்று தருவார்கள் என்று தேட ஆரம்பித்தேன்.(புதுச்சேரியில்) 2013 –ல் திரு.ஜகதீசனிடம் மீண்டும் வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். சரளிவரிசையில் இருந்து மீண்டும் தொடங்கினேன்.. இம்முறை நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். இவர் கீபோர்டு மட்டுமே வாசிப்பார் நான் உடன் பாடவும் பழகினேன். என் கணவருக்கு தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் எனது சங்கீதத்துக்கு இடையூறு ஏற்படவில்லை;. இம்முறை ஆர்வம் அதிகமானது காரணமாக, இசைகலைமணி என்ற 4 ஆண்டு பட்டய படிப்பில் அண்ணாமலை பல்பலைகழகத்தில் சேர்ந்து விட்டேன்;. வருடத்திற்க்கு பத்து நாட்கள் நேர்முக வகுப்பு நடக்கும். அதில் Prayer song முதலில் அப்பரின் தேவாரம் பாடுவார்கள். "திவேட்களம்" என்று சொல்ல கூடிய இந்த சிவஸ்தலம் பல்கலைக்கழ வளாகத்தினுள் அமைய பெற்றது. கம்பர் எழுதிய சரஸ்வதியை பற்றிய பாடலும், திருக்குறளும் பாடுவார்கள். இதை கேட்பது என் பிறவி பயனாகவே கருதினேன். நான் மதிய உணவு இடைவேளையிலும், மாலை நான்கு மணிக்கு மேல் பல்கலைகழகத்தை நன்கு சுற்றிப்பார்பேன். இசை பிரிவு பல்கலைகழகத்தினுள்ளேயே இருக்கம். வீணை வயலின் மிருதங்கம் புல்லாங்குழல் நாட்டியம் என்ற எல்லாபிரிவுக்குள்ளேயும் சென்று நன்கு ரசித்து பார்த்து அனைவரிடனும் பேசி பழகுவேன். வீணை பிரிவில் உள்ளவர்கள் நான் வாசிக்கிறேன் நீங்கள் தாளம் போடுகிறீர்களா? என்று கேட்பர் நான் உடனே எதிரில் அமர்ந்து அவர்கள் வாசிக்க தாளம் போடுவேன். இத்தகைய செயல்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும்.இத்தகைய செயல்களை நான் மீண்ட சொர்கமாகவே கருதினேன். சில நேரங்களில் என் வயது தோற்றம், அதை பார்த்துவிட்டு என்னை சங்கீத பேராசிரியை என்று நினைத்து எனக்கு செலுத்தும் மரியாதையை ஏற்றுக்கொண்டு, மகிழ்ந்து, பின் நானும் உங்களை போல் மாணவிதான் என்பேன். 1984 பிளஸ் 2 முடித்ததும் திருவையாறு இசைக்கல்லுரியில் படிக்க விருப்பம் கொண்டேன் ஆனால் என்தந்தை இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டும் கடினம் என்றும் வீடு திரும்ப நேரம் எடுக்கும் என்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பள்ளி அக்ரஹாரம் போஸ்டாபீசுக்கு பணி மாற்ற முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. பூண்டி தான் கிடைத்தது. அதனால் நான் இசைக்கல்லுரியில் சேராமல் கலைக்கல்லுரியில் சேர்ந்தேன். 1984 –ல் விட்ட இடத்தை (2013-14) ல் கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்N;டன். 4ஆண்டுகள் ஆனால் நான் இரண்டு ஆண்டுகளே படித்தேன். பாடதிட்டம் கடினம் என்று சொல்வதை விட ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி என்றே நான் சொல்வேன்.
வயது காரணமாக voice அடிக்கடி தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தது. நான் அப்பொழுது புதுச்சேரி வானொலி நிலையத்தில் பகுதி நேரசெய்தி வாசிப்பாளராக வேறு பணியாற்றிக்கொண்டிருந்தேன். ENT மருத்துவர்வேறு தொன்டையை கடினமாக பயன்படுத்தாதீகள் என்று அறிவுரை கூறினார். என்னுடைய இசைகலைமணி தான் தடை பட்டதே தவிற என்னுடைய இசை கற்றலுக்கு தடை அல்ல. அண்ணாமலை பல்கலைகழக தரவரிசை சாண்றிதழ் நிலை 4க்கு (கீபோரிடு) தேரிவு எழுதி 2018-ல் உயர்ந்த ஸ்தானத்தில் தேர்ச்சி பெற்றேன். 2019-ல் ஐந்தாவது நிலையிலும் உயர்ந்த ஸ்தானத்தில்(DISTINCTION) வெற்றி பெற்றேன். என்னுடைய குரல் வளத்தை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு தற்பொழுது கீபோடு வாசித்துக்கொண்டே பாட்டு பாடுகின்றேன். தேவாரம் திருப்புகழ் தமிழ் கீர்தணைகளை ஆர்மோனியம் போன்று KEY BOARD பயன்படுத்தி பாடிவருகிறேன். ஒன்றில் மட்டும் உறுதியாக உள்ளேன் பிறரை நம்பி வாழும் நிலை வரும்வரை என்னுடைய கற்றல் தொடரும்.